ஓசியா 9:6 - WCV
அவர்கள் அழிவுக்குத் தப்பி ஓடுவார்கள்: எகிப்து அவர்களைச் சேர்த்துக் கொள்ளும்: மெம்பிசில் அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். அவர்கள் விரும்பி வைத்திருந்த வெள்ளியால் செய்த அரிய பொருள்கள் காஞ்சொறிச் செடிகளுக்கு உரிமைச் சொத்தாகும். அவர்களின் கூடாரங்களில் முட்புதர்கள் வளரும்.