10
ஒன்று கூடிச் சதித்திட்டம் தீட்டுங்கள்: அதுவும் விழலுக்கு இறைத்த நீராகும்: கூடிப்பேசி முடிவெடுங்கள்: அதுவும் பயனற்றுப் போகும். ஏனெனில் கடவுள் எங்களோடு இருக்கிறார்.
11
தமது வலிமையுள்ள கையை என்மேல் வைத்து ஆண்டவர் எனக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த மக்களின் வழிகளை நான் பின்பற்றாதிருக்க எனக்குக்கட்டளை பிறப்பித்தார்:
12
“இந்த மக்கள் சதித்திட்டம் என்று அழைப்பதையெல்லாம் நீங்கள் சதித்திட்டம் என்று சொல்லாதீர்கள். அவர்கள் எதற்கு அஞ்சி நடுங்குகிறார்களோ, அதற்கு நீங்கள் அஞ்சவேண்டாம், நடுங்கி நிலைகுலையவும் வேண்டாம்:
13
படைகளின் ஆண்டவர் ஒருவரையே தூயவர் எனப் போற்றுங்கள்: அவருக்கே அஞ்சுங்கள்: அவர் திருமுன்னேயே நடுங்குங்கள்,
14
அவரே திருத்தூயகமாய் இருப்பார்: இஸ்ரயேலின் இரு குடும்பத்தாருக்கும், இடறு கல்லாகவும், தடுக்கிவிழச் செய்யும் கற்பாறையாகவும் இருப்பார்: எருசலேமில் குடியிருப்போருக்குப் பொறியும் கண்ணியுமாய் இருப்பார்.