27
பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள்.
28
இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, “எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்: மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்.
29
ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது”மலடிகள் பேறுபெற்றோர்” என்றும்”பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறு பெற்றோர்” என்றும் சொல்வார்கள்.
30
அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, “எங்கள் மேல் விழுங்கள்” எனவும் குன்றுகளைப் பார்த்து, “எங்களை மூடிக்கொள்ளுங்கள்” எனவும் சொல்வார்கள்.