எசேக்கியேல் 13:11-13 - WCV
11
சுண்ணாம்பு பூசுகிறவர்களிடம் சொல்: அது விழுந்துவிடும்: அடைமழை பெய்யும்: ஆலங்கட்டிகள் விழும்: புயற்காற்று சீறியெழும்.
12
சுவர் விழும்போது, “நீங்கள் பூசிய சுண்ணாம்பு எங்கே?” என்று உங்களைக் கேட்கமாட்டார்களா?
13
ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் சீற்றமுற, புயற்காற்று சீறியெழும்: நான் சினமுற, அடைமழை பெய்யும்: நான் கோபமுற, ஆலங்கட்டிகள் விழும்: சுவரும் அழிந்துவிடும்.