| 1 | வேற்றினத்தாரே, நெருங்கி வந்து செவிகொடுங்கள்: மக்களினங்களே, கவனித்துக் கேளுங்கள்: மண்ணுலகும் அதில் வாழ்வன யாவும் கேட்கட்டும்: வையகமும் அதில் தோன்றுவன யாவும் செவிகொடுக்கட்டும். | ஏசா 18:3 ஏசா 33:13 ஏசா 41:1 ஏசா 43:9 ஏசா 49:1 நியா 5:3 நியா 5:31 சங் 49:1 சங் 49:2 சங் 50:1 சங் 96:10 மாற் 16:15 மாற் 16:16 வெளிப் 2:7 |
| 2 | வேற்றினத்தார் அனைவர் மேலும் ஆண்டவர் சீற்றம் அடைந்துள்ளார்: அவர்களின் படைத்திரள் முழுவதற்கும் எதிராக வெஞ்சினம் கொண்டுள்ளார்: அவர்களை அவர் அடியோடு அழிப்பார்: அவர்களைப் படுகொலைக்கு உள்ளாக்குவார். | ஏசா 24:1-23 எரே 25:15-29 யோவே 3:9-14 ஆமோ 1:1-2 செப் 3:8 சகரி 14:3 சகரி 14:12-16 ரோம 1:18 வெளிப் 6:12-17 வெளிப் 14:15-20 வெளிப் 19:15-21 வெளிப் 20:9 வெளிப் 20:15 |
| 3 | அவர்களில் வாளுக்கு இரையானோர் தூக்கியெறிப்படுவர்: அவர்களின் பிணங்கள் துர்நாற்றமடிக்கும்: அவர்களின் இரத்தம் மலைகளில் வழிந்தோடும். | ஏசா 14:19 ஏசா 14:20 2இரா 9:35-37 எரே 8:1 எரே 8:2 எரே 22:19 எசே 39:4 எசே 39:11 யோவே 2:20 |
| 4 | விண்ணுலகின் படைத்திரள் அனைத்தும் உருகிப்போகும்: வானின் வெளி ஏட்டுச் சுருளெனச் சுருட்டப்படும்: திராட்சை இலை உதிர்வதுபோலும் அத்தி இலை வீழ்வதுபோலும், வான் படைகள் அனைத்தும் உதிர்ந்து விடும். | ஏசா 13:10 ஏசா 14:12 சங் 102:25 சங் 102:26 எரே 4:23 எரே 4:24 எசே 32:7 எசே 32:8 யோவே 2:30 யோவே 2:31 யோவே 3:15 மத் 24:29 மத் 24:35 மாற் 13:24 மாற் 13:25 அப் 2:19 அப் 2:20 2பேது 3:7-12 வெளிப் 6:13 வெளிப் 6:14 வெளிப் 8:12 வெளிப் 20:11 |
| 5 | ஆண்டவரது வாள் வானில் வெளியேறக் குடித்துள்ளது: இதோ, ஏதோமின் மேலும் அழிவுக்கென ஒதுக்கப்பட்ட மக்களினத்தின் மேலும் தண்டனைத் தீர்ப்புக்காக அது இறங்கப்போகிறது. | உபா 32:14 உபா 32:42 சங் 17:13 எரே 46:10 எரே 47:6 எசே 21:3-5 எசே 21:9-11 செப் 2:12 வெளிப் 1:16 |
| 6 | அவரது வாளில் செம்மறிக்குட்டி, வெள்ளாடு ஆகியவற்றின் இரத்தக் கறை படிந்துள்ளது: அதில் கிடாய்களின் சிறுநீரகக் கொழுப்பு படிந்துள்ளது: ஏனெனில், பொட்சராவில் ஆண்டவருக்குப் பலி கொடுக்கப்படும்: ஏதோம் நாட்டில் படுகொலை நடக்கும். | ஏசா 63:3 எரே 49:13 எசே 21:4 எசே 21:5 எசே 21:10 |
| 7 | அவர்களின் காட்டெருதுகள் செத்துவிழும்: எருதுகளுடன் காளைகளும் மடியும்: அவர்களின் நாடு இரத்தத்தை வெறியேறக் குடிக்கும்: தரைப்புழுதி கொழுப்பால் மூடப்படும். | எண் 23:22 எண் 24:8 உபா 33:17 யோபு 39:9 யோபு 39:10 சங் 92:10 |
| 8 | ஆண்டவர் பழிதீர்க்கும் நாள் அது: சீயோன் வழக்கில் நல்தீர்ப்பீன் ஆண்டு அது. | ஏசா 26:21 ஏசா 35:4 ஏசா 49:26 ஏசா 59:17 ஏசா 59:18 ஏசா 61:2 ஏசா 63:4 உபா 32:35 உபா 32:41-43 சங் 94:1 எரே 46:10 மீகா 6:1 லூக் 18:7 ரோம 2:5 ரோம 2:8 ரோம 2:9 2தெச 1:6-10 வெளிப் 6:10 வெளிப் 6:11 வெளிப் 18:20 வெளிப் 19:2 |
| 9 | ஏதோமின் நீரோடைகள் கீலாகும்: அதன் தரைப்புழுதி கந்தகமாகும்: அதன் நிலம் கொழுந்து விட்டெரியும் கீலாகும். | ஆதி 19:28 உபா 29:23 யோபு 18:15 சங் 11:6 லூக் 17:29 யூதா 1:7 வெளிப் 19:20 வெளிப் 21:8 |
| 10 | இரவும் பகலும் அது அணையாமல் எரியும்: அதன் புகை என்றென்றும் எழும்பிக் கொண்டிருக்கும்: தலைமுறை தோறும் நாடு பாழடைந்து கிடக்கும்: எவருமே அதன் வழியாய் ஒருபோதும் பயணம் செய்யார். | ஏசா 1:31 ஏசா 66:24 எரே 7:20 எசே 20:47 எசே 20:48 மாற் 9:43-48 |
| 11 | கூகையும் சாக்குருவியும் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும்: ஆந்தையும் கருங்காகமும் அங்கே தங்கியிருக்கும்: ஆண்டவர் நூல்பிடித்து அதை உருக்குலையச் செய்வார்: அவர் தூக்குநூல் பிடித்து அதைப் பாழடையச் செய்வார். | ஏசா 13:20-22 ஏசா 14:23 செப் 2:14 வெளிப் 18:2 வெளிப் 18:21-23 |
| 12 | உயர்குடி மக்கள் அங்கே இல்லை: அரசன் என அழைக்க அங்கே யாரும் இல்லை: அதன் தலைவர் அனைவரும் ஒன்றுமில்லாது ஒழிவர். | ஏசா 3:6-8 பிரச 10:16 பிரச 10:17 |
| 13 | அதன் கோட்டைகள்மேல் முட்புதர்களும் அதன் அரண்கள்மேல் காஞ்சொறிப் பூண்டுகளும் நெருஞ்சிகளும் ஓங்கி வளரும்: அது குள்ள நரிகளின் குடியிருப்பாக மாறும்: ஆந்தைகளின் வாழ்விடம் ஆகும். | ஏசா 32:13 ஏசா 32:14 ஓசி 9:6 செப் 2:9 |
| 14 | காட்டு விலங்குகள் கழுதைப் புலிகளுடன் சேர்ந்து திரியும்: காட்டாடுகள் ஒன்றையொன்று கத்தி அழைக்கும்: கூளி அங்கே தங்கித் தான் இளைப்பாறுவதற்கென இடத்தைக் கண்டுபிடிக்கும். | ஏசா 13:21 |
| 15 | ஆந்தை அங்கே கூடுகட்டி முட்டை இட்டுக் குஞ்சுகள் பொரித்து, தன் நிழலில் அவற்றைச் சேர்த்து வளர்க்கும்: பருந்துகளும் சோடி சோடியாய்ச் சேர்ந்துவரும். |
| 16 | ஆண்டவரின் ஏட்டுச் சுருளை ஆய்ந்து படியுங்கள்: “எதுவுமே தனித்துவிடப்படுவதில்லை, துணையின்றி எதுவும் இருப்பதில்லை” ஏனெனில், ஆண்டவரின் வாய் மொழிந்த கட்டளை இது. அவரது ஆவிதான் இவற்றை ஒருங்கிணைத்தது. | ஏசா 30:8 உபா 31:21 யோசு 1:8 நீதி 23:12 தானி 10:21 ஆமோ 3:7 மல்கி 3:16 யோவா 5:39 யோவா 10:35 2பேது 1:19 மத் 5:18 லூக் 21:33 |
| 17 | அவரே அவர்களுக்கென்று சீட்டுப் போட்டார்: அவர்தம் கை, நூல் பிடித்து நாட்டை அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தது: அவர்கள் அதை என்றுமுள உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்: தலைமுறைதோறும் அதில் தங்கி வாழ்வர். | யோசு 18:8 சங் 78:55 அப் 13:19 அப் 17:26 |