35
அவர்கள் அவளை அடக்கம் செய்யச் சென்றபோது அவளுடைய மண்டைஓடு, கால்கள், உள்ளங்கைகள் தவிர வேறொன்றையும் அவர்கள் காணவில்லை.
36
எனவே அவர்கள் திரும்பி வந்து அதை அவனுக்கு அறிவித்தனர். அப்பொழுது அவன், “திஸ்பேயைச் சார்ந்தவரும் தம் ஊழியருமான எலியாவின் வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே:
37
இஸ்ரயேல் நிலப் பகுதியில் ஈசபேலின் உடலை நாய்கள் தின்னும். ஈசபேலின் பிணம் இஸ்ரயேல் நிலப்பகுதியில் சாணத்தைப் போன்று கிடப்பதைப் பார்த்த எவருமே 'இதுதான் ஈசபேல்' என்ற கூற முடியாது!” என்றான்.