1பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்: பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும்.ஏசா 29:17 ஏசா 32:15 ஏசா 32:16 ஏசா 40:3 ஏசா 51:3 ஏசா 52:9 ஏசா 52:10 எசே 36:35 2அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும்: லெபனோனின் எழில் அதற்கு அளிக்கப்படும்: கர்மேல், சாரோனின் மேன்மை அதில் ஒளிரும்: ஆண்டவர் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள்.ஏசா 42:10-12 ஏசா 49:13 ஏசா 55:12 ஏசா 55:13 1நாளா 16:33 சங் 65:12 சங் 65:13 சங் 89:12 சங் 96:11-13 சங் 98:7-9 சங் 148:9-13 சகரி 10:7 ரோம 10:15 ரோம 15:10 3தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்: தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.ஏசா 40:1 ஏசா 40:2 ஏசா 52:1 ஏசா 52:2 ஏசா 57:14-16 நியா 7:11 யோபு 4:3 யோபு 4:4 யோபு 16:5 லூக் 22:32 லூக் 22:43 அப் 18:23 எபிரெ 12:12 4உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, “திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்: அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.”ஏசா 28:16 ஏசா 32:4 சங் 116:11 ஆபகூ 2:3 5அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்: காது கேளாதோரின் செவிகள் கேட்கும்.ஏசா 29:18 ஏசா 32:3 ஏசா 32:4 ஏசா 42:6 ஏசா 42:7 ஏசா 42:16 ஏசா 43:8 சங் 146:8 மத் 9:27-30 மத் 11:3-5 மத் 12:22 மத் 20:30-34 மத் 21:14 மாற் 8:22-25 லூக் 4:18 யோவா 9:1-7 யோவா 9:39-7 யோவா 11:37 அப் 9:17 அப் 9:18 அப் 26:18 எபே 1:17 எபே 1:18 எபே 5:14 6அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்: வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்: பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்: வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும்.மத் 11:5 மத் 15:30 மத் 15:31 மத் 21:14 யோவா 5:8 யோவா 5:9 அப் 3:2 அப் 3:6-8 அப் 8:7 அப் 14:8-10 7கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்: தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்: குள்ளநரி தங்கும் வளைகள்எங்கும் கோரையும் நாணலும் முளைத்து நிற்கும்.ஏசா 29:17 ஏசா 44:3 ஏசா 44:4 மத் 21:43 லூக் 13:29 யோவா 4:14 யோவா 7:38 1கொரி 6:9-11 8அங்கே! நெடுஞ்சாலை ஒன்று இருக்கும்: அது “தூய வழி” என்று பெயர் பெறும். தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க் கடந்து செல்லார்: அவ்வழிவரும் பேதையரும் வழி தவறிச் செல்லார்.ஏசா 11:16 ஏசா 19:23 ஏசா 40:3 ஏசா 40:4 ஏசா 42:16 ஏசா 49:11 ஏசா 49:12 ஏசா 57:14 ஏசா 62:10 எரே 31:21 யோவா 14:6 எபிரெ 10:20-23 9அங்கே சிங்கம் இராது: அவ்வழியில் கொடிய விலங்குகள் செல்வதில்லை, காணப்படுவதுமில்லை: மீட்படைந்தவர்களே அவ்வழியில் நடப்பார்கள்.ஏசா 11:6-9 ஏசா 65:25 லேவி 26:6 எசே 34:25 ஓசி 2:18 வெளிப் 20:1-3 10ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்: மகிழ்ந்து பாடிக் கொண்டே சீயோனுக்கு வருவர்: அவர்கள் முகம் என்றுமுள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்: அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்: துன்பமும் துயரமும் பறந்தோடும்.ஏசா 51:10 ஏசா 51:11 மத் 20:28 1தீமோ 2:6