மத்தேயு 11:3-5 - WCV
3
அவர்கள் மூலமாக, “வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? “ என்று கேட்டார்.
4
அதற்கு இயேசு மறுமொழியாக, “ நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்.
5
பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்: கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்: தொழுநோயாளர் நலமடைகின்றனர்: காது கேளாதோர் கேட்கின்றனர்: இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்: ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.