மத்தேயு 9:27-30 - WCV
27
இயேசு அங்கிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர், “ தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும் “ என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர்.
28
அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “ நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா ? “ என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ ஆம், ஐயா “ என்றார்கள்.
29
பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, “நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும் “ என்றார்.
30
உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி. “ யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள் “ என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார்.