சங்கீதம் 148:9-13 - WCV
9
மலைகளே, அனைத்துக் குன்றுகளே, கனிதரும் மரங்களே, அனைத்துக் கேதுரு மரங்களே.
10
காட்டு விலங்குகளே, அனைத்துக் கால்நடைகளே, ஊர்ந்து செல்லும் உயிரினங்களே, சிறகுள்ள பறவைகளே,
11
உலகின் அரசர்களே, எல்லா மக்களினங்களே, தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே,
12
இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே, நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள்.
13
அவர்கள் ஆண்டவரின் பெயரைப் போற்றுவார்களாக: அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது: அவரது மாட்சி விண்ணையும் மண்ணையும் கடந்தது.