11
விண்ணுலகம் மகிழ்வதாக: மண்ணுலகம் களிகூர்வதாக: கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.
12
வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்: அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும்.
13
ஏனெனில் அவர் வலுகின்றார்: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்: நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார்.