30
கப்பலோட்டுநர்கள் கப்பலில் இரந்து தப்பி ஓட வழி தேடினார்கள். கப்பலின் முன் புறத்தில் இரந்து நங்கூரங்களை இறக்கப் போவதுபோல் நடித்துக் கப்பலிலிருந்த படகைக் கடலில் இறக்கினார்கள்.
31
பவுல் நூற்றுவர் தலைவரையும் படைவீரர்களையும் பார்த்து, “இவர்கள் கப்பலில் இல்லாவிட்டால் நீங்கள் தப்பிப்பிழைக்க முடியாது” என்று கூறினார்.
32
ஆகவே, படைவீரர்கள் படகைக் கட்டியிருந்த கயிறுகளை வெட்டி அது கடலில் அடித்துச் செல்லப்படவிட்டுவிட்டார்கள்.