1
உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர்.
2
ஆண்டவரை நோக்கி, “நீரே என் புகலிடம்: என் அரண்: நான் நம்பியிருக்கும் இறைவன்” என்று உரைப்பார்.
3
ஏனெனில், ஆண்டவர் உம்மை வேடரின் கண்ணியினின்றும் கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார்.
4
அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்: அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்: அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும்.
5
இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்துவரும் அம்புக்கும் நீர் அஞ்சமாட்டீர்.
6
இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர்.
7
உம் பக்கம் ஆயிரம்போர் வீழ்ந்தாலும், உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும், எதுவும் உம்மை அணுகாது.
8
பொல்லார்க்குக் கிடைக்கும் தண்டனையை நீரே பார்ப்பீர்: உம் கண்ணாலேயே நீர் காண்பீர்.
9
ஆண்டவரை உம் புகலிடமாய்க் கொண்டீர்: உன்னதரை உம் உறைவிடமாக்கிக் கொண்டீர்.
10
ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது: வாதை உம் கூடாரத்தை நெருங்காது.