சங்கீதம் 130:4-8 - WCV
4
நீரோ மன்னிப்பு அளிப்பவர்: மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.
5
ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்: என் நெஞ்சம் காத்திருக்கின்றது: அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
6
விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.
7
இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு: பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது: மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.
8
எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே!