9
அவர்களிடம் அவர்,”இந்நாட்டை ஆண்டவர் உங்களுக்கு அளிப்பார் என்று நான் அறிவேன். ஏனெனில் உங்களைப் பற்றிய அச்சம் எங்களிடையே எழுந்துள்ளது.உலகில் வாழ்வோர் அனைவரும் உங்கள்முன் நடுங்குகின்றனர்.
10
எகிப்தினின்று நீங்கள் வெளியேறும்பொழுது செங்கடலின் நீரை ஆண்டவர் வற்றச்செய்தது பற்றி அவர்கள் கேள்விப்பட்டுள்ளனர்.நீங்கள் கீழை யோர்தானில் இரண்டு எமோரிய அரசர்களான சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் அவர்களை அழித்ததையும் அவர்கள் அறிவார்கள்.
11
அதைக் கேள்விப்பட்டவுடன் எங்கள் இதயம் கலக்கமுற்றது.உங்கள் முன்னிலையில் எங்கள் உள்ளம் தளர்ந்திருக்கிறது.ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர், மேலே விண்ணுலகம் முதல் கீழே மண்ணுலகம் அனைத்திற்கும் கடவுள்.