ஏசாயா 10:29-31 - WCV
29
கணவாயை அவர்கள் கடந்து விட்டார்கள்: கேபாவில் தங்கி இரவைக் கழிக்கின்றார்கள்: இராமா நகரின் மக்கள் அஞ்சி நடுங்குகின்றார்கள்: சவுலின் நகரான கிபயாவிலுள்ள மக்கள் ஓட்டமெடுக்கின்றார்கள்.
30
பெத்தல்லிம் மக்களே, கூக்குரலிடுங்கள்: இலாயிசா மக்களே, உற்றுக் கேளுங்கள்: அனத்தோத்தின் மக்களே, மறுமொழி கூறுங்கள்.
31
மத்மேனா மக்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள்: கேபிமினில் வாழ்வோர் புகலிடம் தேடி ஓடுகிறார்கள்.