தானியேல் 4:1-3 - WCV
1
அரசர் நெபுகத்னேசர் உலகில் எங்கணுமுள்ள எல்லா இனத்தார்க்கும் நாட்டினர்க்கும் மொழியினருக்கும் அறிவிப்பது:
2
உங்களுக்குச் சமாதானம் பெருகுவதாக! மாட்சிமிகு கடவுள் எனக்காகச் செய்தருளிய அடையாளங்களையும் விந்தைகளையும் வெளிப்படுத்துவது நலமென எனக்குத் தோன்றுகிறது.
3
அவர் தந்த அடையாளங்கள் எத்துணைப் பெரியன! அவர் ஆற்றிய விந்தைகள் எத்துணை வலியன! அவரது அரசு என்றுமுள அரசு! அவரது ஆட்சியுரிமை வழிவழி நிலைக்கும்.