| 1 | ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: | எரே 1:11 எரே 7:1 எரே 23:28 எசே 7:1 எபிரெ 1:1 2பேது 1:21 |
| 2 | “நீ சென்று எருசலேம் நகரினர் அனைவரும் கேட்கும் முறையில் இவ்வாறு பறைசாற்று. ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இளமையின் அன்பையும் மணமகளுக்குரிய காதலையும் விதைக்கப்படாத பாலைநிலத்தில் நீ என்னை எவ்வாறு பின்பற்றினாய் என்பதையும் நான் நினைவுகூர்கிறேன். | எரே 7:2 எரே 11:6 எரே 19:2 நீதி 1:20 நீதி 8:1-4 ஏசா 58:1 ஓசி 8:1 யோனா 1:2 மத் 11:15 லூக் 12:13 |
| 3 | இஸ்ரயேல் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது: அவரது அறுவடையின் முதற்கனியாய் இருந்தது: அதனை உண்டவர் அனைவரும் குற்றவாளிகள் ஆயினர்: அவர்கள்மேல் தீமையே வந்து சேர்ந்தது, என்கிறார் ஆண்டவர். | யாத் 19:5 யாத் 19:6 உபா 7:6 உபா 14:2 உபா 26:19 சகரி 14:20 சகரி 14:21 எபே 1:4 1பேது 2:9 |
| 4 | யாக்கோபின் வீட்டாரே, இஸ்ரயேல் வீட்டின் அனைத்துக் குடும்பத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். | எரே 5:21 எரே 7:2 எரே 13:15 எரே 19:3 எரே 34:4 எரே 44:24-26 ஏசா 51:1-4 ஓசி 4:1 மீகா 6:1 |
| 5 | ஆண்டவர் கூறுவது இதுவே: என்னை விட்டகன்று வீணானவற்றைப் பின்பற்றி வீணாகும் அளவுக்கு உங்கள் தந்தையர் என்னிடம் என்ன தவறு கண்டனர்? | எரே 2:31 ஏசா 5:3 ஏசா 5:4 ஏசா 43:22 ஏசா 43:23 மீகா 6:2 மீகா 6:3 |
| 6 | எகிப்து நாட்டிலிருந்து நம்மை அழைத்து வந்தவரும் பாழ்நிலமும் படுகுழிகள் நிறைந்த நிலமும் வறட்சி, காரிருள் மிகுந்த நிலமும் யாருமே கடந்து செல்லாததும், யாருமே வாழாததுமாகிய பாலைநிலத்தில் நம்மை நடத்தி வந்தவருமான ஆண்டவர் எங்கே? என்று அவர்கள் கேட்கவில்லையே! | எரே 2:8 எரே 5:2 நியா 6:13 2இரா 2:14 யோபு 35:10 சங் 77:5 ஏசா 64:7 |
| 7 | செழிப்பான நாட்டுக்கு அதன் கனிகளையும் நலன்களையும் நுகருமாறு நான் உங்களை அழைத்து வந்தேன். நீங்களோ, அந்நாட்டிற்குள் வந்து அதனைத் தீட்டுப்படுத்தினீர்கள்: எனது உரிமைச் சொத்தை நீங்கள் அருவருப்புக்குள்ளாக்கினீர்கள். | எண் 13:27 எண் 14:7 எண் 14:8 உபா 6:10 உபா 6:11 உபா 6:18 உபா 8:7-9 உபா 11:11 உபா 11:12 நெகே 9:25 எசே 20:6 |
| 8 | குருக்கள், “ஆண்டவர் எங்கே?” என்று கேட்கவில்லை: திருச்சட்டத்தைப் போதிப்போர் என்னை அறியவில்லை: ஆட்சியாளர் எனக்கு எதிராகக் கலகம் செய்தனர்: இறைவாக்கினர் பாகால் பெயரால் பேசிப் பயனற்றவற்றைப் பின்பற்றினர். | எரே 2:6 எரே 5:31 எரே 8:10 எரே 8:11 எரே 23:9-15 1சாமு 2:12 ஏசா 28:7 ஏசா 29:10 ஏசா 56:9-12 ஓசி 4:6 |
| 9 | ஆதலால் இன்னும் உங்களோடு வழக்காடுவேன்” என்கிறார் ஆண்டவர். உங்கள் மக்களின் மக்களோடும் வழக்காடுவேன். | எரே 2:29 எரே 2:35 ஏசா 3:13 ஏசா 43:26 எசே 20:35 எசே 20:36 ஓசி 2:2 மீகா 6:2 |
| 10 | சைப்ரசு நாட்டின் கடற்கரைப் பகுதிகளுக்குக் கடந்து சென்றுபாருங்கள்: கேதாருக்கு ஆளனுப்பி முழுத் தெளிவு பெறுங்கள்: இது போன்ற செயல் உண்டோ என்று பாருங்கள். | ஆதி 10:4 ஆதி 10:5 எண் 24:24 1நாளா 1:7 1நாளா 23:1 1நாளா 23:12 சங் 120:5 எசே 27:6 தானி 11:30 |
| 11 | தங்கள் தெய்வங்கள் தெங்வங்களே அல்ல எனினும், அவற்றினை மாற்றிக்கொண்ட மக்களினம் உண்டா? என் மக்களோ, என் மாட்சியைப் பயனற்ற ஒன்றிற்காக மாற்றிக் கொண்டனர். | எரே 2:5 மீகா 4:5 1பேது 1:18 |
| 12 | வானங்களே இதைக் கண்டு திடுக்கிடுங்கள்: அஞ்சி நடுங்கித் திகைத்து நில்லுங்கள், என்கிறார் ஆண்டவர். | எரே 6:19 எரே 22:29 உபா 32:1 ஏசா 1:2 மீகா 6:2 மத் 27:45 மத் 27:50-53 |
| 13 | ஏனெனில், என் மக்கள் இரண்டு தீச்செயல்கள் செய்தார்கள்: பொங்கிவழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்: தண்ணீர் தேங்காத, உடைந்த குட்டைகளைக் தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள். | எரே 2:31 எரே 2:32 எரே 4:22 எரே 5:26 எரே 5:31 சங் 81:11-13 ஏசா 1:3 ஏசா 5:13 ஏசா 63:8 மீகா 2:8 மீகா 6:3 |
| 14 | இஸ்ரயேல் ஓர் அடிமையா? வீட்டில் அடிமையாகப் பிறந்தவனா? அவன் ஏன் சூறையாடப்பட வேண்டும்? | யாத் 4:22 ஏசா 50:1 |
| 15 | அவனுக்கு எதிராக இளஞ் சிங்கங்கள் கர்ச்சித்து, பெருமுழக்கம் செய்து அவனது நாட்டைப் பாழடையச் செய்தன: அவன் நகர்கள் தீக்கிரையாக்கப்பட்டன: அவற்றில் குடியிருப்போர் எவருமிலர். | எரே 5:6 எரே 25:30 எரே 50:17 நியா 14:5 யோபு 4:10 சங் 57:4 ஏசா 5:29 ஓசி 5:14 ஓசி 11:10 ஓசி 13:7 ஓசி 13:8 ஆமோ 3:4 ஆமோ 3:8 ஆமோ 3:12 நாகூ 2:11 |
| 16 | மெம்பிசு, தகபனேசு நகரினர் உன் தலையை மழித்தனர். | 2இரா 18:21 2இரா 23:33 ஏசா 30:1-6 ஏசா 31:1-3 |
| 17 | உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை வழிநடத்திச் செல்லும்போதே அவரை நீ புறக்கணித்ததால் அன்றோ இதை உனக்கு வருவித்துக் கொண்டாய்? | எரே 2:19 எரே 4:18 லேவி 26:15-46 எண் 32:23 உபா 28:15-68 யோபு 4:8 ஏசா 1:4 ஓசி 13:9 |
| 18 | நைல் நதி நீரைக் குடிக்க இப்போது நீ எகிப்துக்குப் போவதால் உனக்கு வரும் பயன் என்ன? யூப்பிரத்தீசு நதியின் நீரைக் குடிக்க அசீரியாவுக்குப் போவதால் உனக்கு வரும் பயன் என்ன? | எரே 2:36 எரே 37:5-10 ஏசா 30:1-7 ஏசா 31:1 புலம் 4:17 எசே 17:15 ஓசி 7:11 |
| 19 | உன் தீச்செயலே உன்னைத் தண்டிக்கும்: உன் பற்றுறுதியின்மையே உன்னைக் கண்டிக்கும்: உன் கடவுளாகிய ஆண்டவராம் என்னைப் புறக்கணித்தது தீயது எனவும் கசப்பானது எனவும் கண்டுணர்ந்து கொள். என்னைப் பற்றிய அச்சமே உன்னிடம் இல்லை, என்கிறார் என் தலைவராகிய படைகளின் ஆண்டவர். | எரே 2:17 நீதி 1:31 நீதி 5:22 ஏசா 3:9 ஏசா 5:5 ஏசா 50:1 ஓசி 5:5 |
| 20 | நெடுங்காலத்துக்கு முன்பே உன் நுகத்தடியை முறித்துவிட்டாய்: உன் தளைகளை அறுத்துவிட்டாய்: “நான் ஊழியம் செய்வேன்” என்று சொன்னாய். உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும், பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் விலைமாதாகக் கிடந்தாயே! | எரே 30:8 யாத் 3:8 லேவி 26:13 உபா 4:20 உபா 4:34 உபா 15:15 ஏசா 9:4 ஏசா 10:27 ஏசா 14:25 நாகூ 1:13 |
| 21 | முற்றிலும் நல்ல கிளையினின்று உயர் இனத் திராட்சைச் செடியாய் உன்னை நட்டு வைத்தேன்: நீ கெட்டுப்போய்த் தரங்கெட்ட காட்டுத் திராட்சைச் செடியாய் மாறியது எப்படி? | யாத் 15:17 சங் 44:2 சங் 80:8 ஏசா 5:1 ஏசா 5:2 ஏசா 60:21 ஏசா 61:3 மத் 21:33 மாற் 12:1 லூக் 20:9 யோவா 15:1 |
| 22 | நீ உன்னை உவர் மண்ணினால் கழுவினாலும், எவ்வளவு சவர்க்காரத்தைப் பயன்படுத்தினாலும், உன் குற்றத்தின் கறை என் கண்முன்னே இருக்கிறது, என்கிறார் என் தலைவராகிய ஆண்டவர். | யோபு 9:30 யோபு 9:31 |
| 23 | “நான் தீட்டுப்படவில்லை: பாகால்களுக்குப்பின் திரியவில்லை” என எப்படி நீ கூற முடியும்? பள்ளத்தாக்கில் நீ சென்ற பாதையைப் பார்: நீ செய்தது என்ன என்று அறிந்துகொள்: இங்கும் அங்கும் விரைந்தோடும் பெண் ஒட்டகம் நீ. | எரே 2:34 எரே 2:35 ஆதி 3:12 ஆதி 3:13 1சாமு 15:13 1சாமு 15:14 சங் 36:2 நீதி 28:13 நீதி 30:12 நீதி 30:20 லூக் 10:29 ரோம 3:19 1யோவா 1:8-10 வெளிப் 3:17 வெளிப் 3:18 |
| 24 | பாலைநிலத்தில் பழகியதும், காம வேட்கையில் மோப்பம் பிடிப்பதுமான காட்டுக் கழுதை நீ! அதன் காம வெறியை யாரால் கட்டுப்படுத்த முடியும்? அதனை வருந்தித் தேடத் தேவையில்லை: புணர்ச்சிக் காலத்தில் அதனை எளிதில் காணலாம். | எரே 14:6 யோபு 11:12 யோபு 39:5-8 |
| 25 | “கால் தேய ஓடாதே: தொண்டை வறண்டுபோக விடாதே” என்றால், நீயோ, “பயனில்லை. நான் வேற்றுத் தெய்வங்கள்மேல் மோகம் கொண்டேன்: அவர்கள் பின்னே திரிவேன்” என்றாய். | எரே 13:22 உபா 28:48 ஏசா 20:2-4 புலம் 4:4 ஓசி 2:3 லூக் 15:22 லூக் 16:24 |
| 26 | திருடன் பிடிபடும்போது மானக்கேடு அடைவது போல, இஸ்ரயேல் வீட்டாரும் அவர்களின் அரசர்களும் தலைவர்களும் குருக்களும் இறைவாக்கினர்களும் மானக்கேடு அடைவார்கள். | எரே 2:36 எரே 3:24 எரே 3:25 நீதி 6:30 நீதி 6:31 ஏசா 1:29 ரோம 6:21 |
| 27 | ஒரு மரத்தை நோக்கி, “நீயே என் தந்தை” என்பர்: ஒரு கல்லை நோக்கி, “நீயே என்னைப் பெற்றெடுத்தவள்” என்பர். எனக்கு முகத்தையல்ல, முதுகையே காட்டுகின்றனர்: ஆனால் தீங்கு வந்துற்ற நேரத்தில், “எழுந்தருளி எங்களை விடுவியும்” என்பர். | எரே 10:8 சங் 115:4-8 ஏசா 44:9-20 ஏசா 46:6-8 ஆபகூ 2:18 ஆபகூ 2:19 |
| 28 | உனக்கென நீ செய்துகொண்ட தெய்வங்கள் எங்கே? உனக்குத் தீங்கு வந்துற்ற நேரத்தில், முடிந்தால் அவை எழுந்து உன்னை விடுவிக்கட்டுமே! யூதாவே, உன் நகர்கள் எத்தனையோ, அத்தனை தெய்வங்கள் உன்னிடம் இருக்கின்றனவே! | உபா 32:37 நியா 10:14 2இரா 3:13 ஏசா 45:20 ஏசா 46:2 ஏசா 46:7 |
| 29 | என்னிடம் ஏன் முறையிடுகிறீர்கள்? நீங்கள் எல்லாரும் எனக்கு எதிராய்க் கலகம் செய்தவர்களே, என்கிறார் ஆண்டவர். | எரே 2:23 எரே 2:35 எரே 3:2 |
| 30 | நான் உங்கள் மக்களை அடித்து நொறுக்கியது வீண்: அவர்கள் திருந்தவில்லை: சிங்கம் அழித்தொழிப்பதுபோல உங்கள் வாளே உங்கள் இறைவாக்கினரை வீழ்த்தியது. | எரே 5:3 எரே 6:29 எரே 6:30 எரே 7:28 எரே 31:18 2நாளா 28:22 ஏசா 1:5 ஏசா 9:13 எசே 24:13 செப் 3:2 வெளிப் 9:20 வெளிப் 9:21 வெளிப் 16:9 |
| 31 | இத்தலைமுறையினரே! ஆண்டவர் வாக்கைக் கவனியுங்கள். நான் இஸ்ரயேலுக்குப் பாலைநிலமாய் இருந்தேனா? அல்லது இருள்சூழ் நிலமாய் இருந்தேனா? “நாங்கள் விருப்பம் போல் சுற்றித் திரிவோம்: இனி உம்மிடம் வரமாட்டோம்” என்று என் மக்கள் ஏன் கூறினார்கள்? | ஆமோ 1:1 மீகா 6:9 |
| 32 | ஒரு கன்னிப் பெண் தன் நகைகளை மறப்பாளோ? மணப்பெண் தன் திருமண உடையை மறப்பதுண்டோ? என் மக்களோ என்னை எண்ணிறந்த நாள்களாய் மறந்து விட்டார்கள். | எரே 2:11 ஆதி 24:22 ஆதி 24:30 ஆதி 24:53 2சாமு 1:24 சங் 45:13 சங் 45:14 ஏசா 61:10 எசே 16:10-13 1பேது 3:3-5 வெளிப் 21:2 |
| 33 | காதலரை அடையும் வழிகளைச் சிறப்பாய் வகுத்துள்ளாய்: ஒழுக்கமற்ற பெண்களுக்குக்கூட உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய். | எரே 2:23 எரே 2:36 எரே 3:1 எரே 3:2 ஏசா 57:7-10 ஓசி 2:5-7 ஓசி 2:13-7 |
| 34 | மாசற்ற வறியவரின் இரத்தக்கறை உன் மேலாடை விளிம்புகளில் காணப்படுகின்றது: அவர்கள் கன்னமிட்டுக் திருடியதை நீ கண்டாயா? | எரே 7:31 எரே 19:4 2இரா 21:16 2இரா 24:4 சங் 106:37 சங் 106:38 ஏசா 57:5 ஏசா 59:7 எசே 16:20 எசே 16:21 எசே 20:31 |
| 35 | இவை அனைத்தையும் நீ செய்திருந்தும் நீயோ, “நான் மாசற்றவள்: அவர் சினம் என்னைவிட்டு அகன்று விட்டது உறுதி” என்கிறாய். “பாவம் செய்யவில்லை” என்று நீ கூறியதால், நான் உனக்குத் தீர்ப்பு வழங்குவேன். | எரே 2:23 எரே 2:29 யோபு 33:9 நீதி 28:13 ஏசா 58:3 ரோம 7:9 |
| 36 | ஏன் இவ்வளவு எளிதாக உன் வழிகளை மாற்றிக் கொள்கின்றாய்? அசீரியாவால் நீ மானக்கேட்டிற்கு உள்ளானதுபோல் எகிப்தினாலும் மானக்கேட்டிற்கு உள்ளாவாய்! | எரே 2:18 எரே 2:23 எரே 2:33 எரே 31:22 ஓசி 5:13 ஓசி 7:11 ஓசி 12:1 |
| 37 | உன் தலைமேல் கைகளை வைத்துக் கொண்டுதான் அங்கிருந்து திரும்பி வருவாய்: ஏனெனில், நீ நம்பியிருந்தவர்களை ஆண்டவர் உதறித் தள்ளிவிட்டார்: அவர்களால் உனக்குப் பயன் ஏதும் இல்லை.” | 2சாமு 13:19 |