ஏசாயா 30:1-6 - WCV
1
கலகக்காரரான புதல்வருக்கு ஐயோ கேடு! என்கிறார் ஆண்டவர். என்னிடமிருந்து பெறாத திட்டத்தைச் செயல்படுத்துகின்றனர்: என் தூண்டுதல் இன்றி உடன்படிக்கை செய்கின்றனர்: இவ்வாறு பாவத்தின் மேல் பாவத்தைக் குவிக்கின்றனர்.
2
என்னைக் கேளாமலேயே எகிப்திற்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்: பார்வோன் ஆற்றலில் அடைக்கலம் பெறவும் எகிப்தின் நிழலில் புகலிடம் தேடவும் போகின்றனர்.
3
பார்வோனின் அடைக்கலம் உங்களுக்கு மானக்கேட்டைக் கொணரும்: எகிப்தின் நிழலில் புகலிடம் தேடுவது உங்களுக்கு இகழ்ச்சி ஆகும்.
4
யூதாவின் தலைவர் சோவானுக்கு வந்தனர்: அதன் தூதர் ஆனேசுக்குச் சென்றனர்.
5
பயனற்ற மக்களினத்தை முன்னிட்டு அனைவரும் மானக்கேடடைவர்: அவர்களால் யாதொரு உதவியோ பயனோ இராது: ஆனால் மானக்கேடும் அவமதிப்புமே மிஞ்சும்.
6
நெகேபிலுள்ள விலங்கினங்களைப் பற்றிய இறைவாக்கு: கடுந்துயரும் வேதனையும் நிறைந்த நாடு அது: பெண்சிங்கமும் ஆண்சிங்கமும், விரியன் பாம்பும் பறக்கும் நாகமும் உள்ள நாடு அது! இத்தகைய நாட்டின் வழியாய், கழுதைகளின் முதுகின்மேல் அவர்கள் தங்கள் செல்வங்களையும் ஒட்டகங்களின் திமில்கள்மேல் தங்கள் அரும்பொருட்களையும் சுமத்தி, முற்றிலும் பயனற்ற மக்களினங்களுக்குக் கொண்டு செல்கிறார்கள்.