ஏனெனில் தன் சகோதரி அணிந்திருந்த மூக்கணியையும் கைக்காப்புகளையும் அவன் கண்டிருந்தான்.“அந்த மனிதர் என்னிடம் இவ்வாறு சொன்னார்” என்று தன் சகோதரி ரெபேக்கா கூறிய வார்த்தைகளையும் கேட்டிருந்தான்.அவன் அந்த ஆளிடம் ஓடிச்சென்று நீரூற்றருகில் ஒட்டகங்களோடு அவர் நின்றுகொண்டிருப்பதைக் கண்டான்.