அவனுக்கு எதிராக இத்தியர்கள் கப்பல்களில் வருவார்கள்: அவனோ அவர்களுக்கு அஞ்சிப் பின்வாங்கிப் புறமுதுகிட்டு ஓடுவான்: அவன் கடுஞ்சினமுற்று புனித உடன்படிக்கைக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுப்பான்: மீண்டும் வந்து, புனித உடன்படிக்கையைக் கைவிட்டவர்கள்மேல் தன் கவனத்தைத் திருப்புவான்.