ஏசாயா 51:1-4 - WCV
1
விடுதலையை நாடுவோரே, ஆண்டவரைத் தேடுவோரே, எனக்குச் செவிகொடுங்கள். நீங்கள் எந்தப் பாறையினின்று செதுக்கப்பட்டீர்களோ, எந்தக் குழியினின்று தோண்டப் பட்டீர்களோ, அதை நோக்குங்கள்.
2
உங்கள் தந்தை ஆபிரகாமையும் உங்களைப் பெற்றெடுத்த சாராவையும் நினைத்துப் பாருங்கள்: தனியனாய் இருந்த அவனை அழைத்தேன்: அவனுக்கு ஆசி வழங்கிப் பெரும் திரளாக்கினேன்.
3
ஆண்டவர் சீயோனைத் தேற்றுவார்: பாழடைந்த அதன் பகுதிகள் அனைத்திற்கும் ஆறுதல் அளிப்பார்: அதன் பாலைநிலத்தை ஏதேன்போல் அமைப்பார்: அதன் பாழ் இடங்களை ஆண்டவரின் தோட்டம்போல் ஆக்குவார். மகிழ்ச்சியும் அக்களிப்பும் அதில் காணப்படும்: நன்றிப்பாடலும் புகழ்ச்சிப் பண்ணும் அங்கே ஒலிக்கும்.
4
என் மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்: என் இனமே, எனக்குச் செவிகொடு: ஏனெனில் திருச்சட்டம் என்னிடமிருந்து புறப்பட்டுச் செல்லும்: என் நீதி மக்களினங்களுக்கு ஒளியாகத் திகழும்.