5
காட்டுக் கழுதையைக் கட்டற்று திரியச் செய்தவர் யார்? கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?
6
பாலைநிலத்தை அதற்கு வீடாக்கினேன்: உவர் நிலத்தை அதற்கு உறைவிடமாக்கினேன்.
7
நகர அமளியை அது நகைக்கும்: ஓட்டுவோன் அதட்டலுக்கும் செவிகொடாது.
8
குன்றுகள் எங்கும் தேடும் மேய்ச்சலை: பசுமை அனைத்தையும் நாடி அலையும்.