மத்தேயு 27:50-53 - WCV
50
இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்.
51
அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது: நிலம் நடுங்கியது: பாறைகள் பிளந்தன.
52
கல்லறைகள் திறந்தன: இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன.
53
இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள்.