7
ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வளமிகு நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.அந்த நாடு பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்கின்ற ஆறுகளையும் ஊற்றுகளையும் ஏரிகளையும் கொண்டது.
8
கோதுமை, திராட்சை, அத்தி, மாதுளை, பார்லி ஆகியவை நிறைந்த நாடு.அது ஒலிவ எண்ணெயும் தேனும் நிறைந்த நாடு.
9
அந்த நாட்டில் பஞ்சமின்றி நீங்கள் அப்பங்களை உண்பீர்கள்.அங்கு உங்களுக்கு எந்தக் குறையும் இராது.அந்த நாட்டின் பாறைகள் அனைத்தும் இரும்பு.அதன் மலைகளிலிருந்து செம்பு வெட்டி எடுக்கலாம்.