சங்கீதம் 81:11-13 - WCV
11
ஆனால் என் மக்கள் என் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை: இஸ்ரயேலர் எனக்குப் பணியவில்லை.
12
எனவே, அவர்கள் தங்கள் எண்ணங்களின்படியே நடக்குமாறு, அவர்களின் கடின இதயங்களிடமும் அவர்களை விட்டுவிட்டேன்.
13
என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்.