இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ஏசாயா 29

                   
புத்தகங்களைக் காட்டு
1தாவீது பாசறை அமைத்த நகராகிய அரியேல்! அரியேல்! உனக்கு ஐயோ கேடு! ஆண்டிற்குப்பின் ஆண்டு கடந்து வரட்டும்: விழாக்கள் முறைமுறையாய் வந்து போகட்டும்.ஏசா 31:9 எசே 43:15 எசே 43:16
2அரியேலுக்கு நான் இடுக்கண் விளைவிப்பேன்: அங்கு அழுகையும் புலம்பலும் நிறைந்திருக்கும்: அரியேல் போலவே அது எனக்கிருக்கும்.ஏசா 5:25-30 ஏசா 10:5 ஏசா 10:6 ஏசா 10:32 ஏசா 17:14 ஏசா 24:1-12 ஏசா 33:7-9 ஏசா 36:22 ஏசா 37:3 எரே 32:28-32 எரே 39:4 எரே 39:5
3உன்னைச் சுற்றிலும் பாசறை அமைப்பேன்: உன்னைப் போர்க் கோபுரங்களால் சூழ்ந்து வளைப்பேன்: உனக்கெதிராய் முற்றுகைத் தளங்களை எழுப்புவேன்.2இரா 18:17 2இரா 19:32 2இரா 24:11 2இரா 24:12 2இரா 25:1-4 எசே 21:22 மத் 22:7 லூக் 19:43 லூக் 19:44
4தாழ்த்தப்பட்ட நீ தரையிலிருந்து பேசுவாய்: நலிந்த உன் குரல் புழுதியிலிருந்து எழும்பும்: உன் குரல், இறந்தவன் ஆவியின் ஒலிபோல, மண்ணிலிருந்து வெளிவரும்:, உன் பேச்சு புழுதிக்குள்ளிலிருந்து முணுமுணுக்கும்.ஏசா 2:11-21 ஏசா 3:8 ஏசா 51:23 சங் 44:25 புலம் 1:9
5உன் பகைவனின் திரள் நுண்ணிய தூசிபோல் இருக்கும்: கொடியவர் கூட்டம்”பறக்கும் பதர் போலிருக்கும்: இவை திடீரென்று ஒரு நொடியில் நிகழும்.ஏசா 10:16-19 ஏசா 25:5 ஏசா 31:3 ஏசா 31:8 ஏசா 37:36
6இடிமுழக்கம், நில நடுக்கம், பேரிரைச்சல், சூறாவளி, புயல்காற்று விழுங்கும் நெருப்புப் பிழம்பு ஆகியவற்றால் படைகளின் ஆண்டவர் உன்னைத் தண்டிப்பார்.ஏசா 5:26-30 ஏசா 28:2 ஏசா 30:30 ஏசா 33:11-14 1சாமு 2:10 1சாமு 12:17 1சாமு 12:18 2சாமு 22:14 மத் 24:7 மாற் 13:8 லூக் 21:11 வெளிப் 11:13 வெளிப் 11:19 வெளிப் 16:18
7அரியேலுக்கு எதிராகப் போர்தொடுக்கும் திரளான வேற்றினத்தார் அனைவரும் அதற்கும் அதன் அரணுக்கும் எதிராகப் போரிட்டு அதைத் துன்புறுத்திய அனைவரும் கனவு போலும், கனவில் காணும் காட்சிபோலும் மறைவர்.ஏசா 37:36 ஏசா 41:11 ஏசா 41:12 எரே 25:31-33 எரே 51:42-44 நாகூ 1:3-12 சகரி 12:3-5 சகரி 14:1-3 சகரி 14:12-15 வெளிப் 20:8 வெளிப் 20:9
8பசியாய் இருப்பவர் உண்பதாய்க் கனவு கண்டு விழித்தெழுந்து வெறும் வயிற்றினராய் வாடுவது போலும், தாகமாய் இருப்பவர் நீர் அருந்துவதாய்க் கனாக்கண்டு விழித்தெழுந்து தீராத்தாகத்தால் தவிப்பது போலும், சீயோன் மலைமேல் போர் தொடுக்கும் திரளான வேற்றினத்தார் அனைவரும் ஆவர்.ஏசா 10:7-16 2நாளா 32:21
9திகிலடையுங்கள்: திகைத்து நில்லுங்கள்: குருடரைப்போல் இருங்கள்: பார்வையற்றவராகுங்கள். ஆனால் திராட்சை இரசத்ததால் அல்ல: தடுமாறுங்கள்: ஆனால் மதுவால் அல்ல.ஏசா 1:2 ஏசா 33:13 ஏசா 33:14 எரே 2:12 ஆபகூ 1:5 அப் 13:40 அப் 13:41 வெளிப் 17:6
10ஏனெனில் ஆழ்ந்த தூக்கம் தரும் ஆவியை ஆண்டவர் உங்கள் மீது அனுப்பியுள்ளார்: இறைவாக்கினராகிய உங்கள் கண்களை மூடியுள்ளார்: திருக்காட்சியாளராகிய உங்கள் பார்வையை மறைத்துள்ளார்.ஏசா 29:14 ஏசா 6:9 ஏசா 6:10 1சாமு 26:12 சங் 69:23 மீகா 3:6 அப் 28:26 அப் 28:27 ரோம 11:8
11ஆதலால் ஒவ்வொரு காட்சியும் உங்களுக்கு மூடி முத்திரையிடப்பட்ட ஏட்டுச்சுருளின் வார்த்தைகள் போலாகும். எழுத்தறிந்த ஒருவரிடம் “இதைப்படியும்” என்றால், அவர் “என்னால் இயலாது: இது மூடி முத்திரையிடப்பட்டுள்ளதே” என்பார்.ஏசா 8:16
12எழுத்தறியா ஒருவரிடம் ஏட்டுச் சுருளைக் கொடுத்து “இதைப்படியும்” என்றால் அவர் “எனக்குப் படிக்கத் தெரியாதே” என்பார்.ஏசா 29:18 ஏசா 28:12 ஏசா 28:13 எரே 5:4 ஓசி 4:6 யோவா 7:15 யோவா 7:16
13என் தலைவர் கூறுவது இதுவே: வாய்ச் சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர்: உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்: அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலையில் இருக்கிறது: அவர்களது இறையச்சம் மனனம் செய்த வெறும் மனித கட்டளையைச் சார்ந்ததே!ஏசா 10:6 ஏசா 48:1 ஏசா 48:2 ஏசா 58:2 ஏசா 58:3 சங் 17:1 எரே 3:10 எரே 5:2 எரே 12:2 எரே 42:2-4 எரே 42:20-4 எசே 33:31-33 மத் 15:7-9
14ஆதலால், இதோ நான் இந்த மக்களுக்காக மீண்டும் வியத்தகு செயல் புரிவேன். அது விந்தைக்கு மேல் விந்தையாக இருக்கும். அவர்களுடைய ஞானிகளின் ஞானம் அழிந்துபோம்: அவர்களுடைய அறிஞர்களின் அறிவு மறைந்துபோம்.ஏசா 29:9 ஏசா 28:21 ஆபகூ 1:5 யோவா 9:29-34
15ஆண்டவரிடமிருந்து தங்கள் திட்டங்களை மனத்தின் ஆழங்களில் மறைத்துக்கொண்டு, தங்கள் செயல்களை இருளில் செய்து, “நம்மை எவர் காணப்போகின்றார்? நம்மை எவர் அறியப் போகின்றார்?” எனச் சொல்வோருக்கு ஐயோ கேடு!ஏசா 5:18 ஏசா 5:19 ஏசா 28:15 ஏசா 28:17 ஏசா 30:1 யோபு 22:13 யோபு 22:14 சங் 10:11-13 சங் 64:5 சங் 64:6 சங் 139:1-8 எரே 23:24 எசே 8:12 எசே 9:9 செப் 1:12 வெளிப் 2:23
16நீங்கள் செய்யும் முறைகேடுதான் என்ன? குயவனுக்குக் களிமண் ஈடாகுமோ? கைவேலை தன் கைவினைஞனை நோக்கி, “நீர் என்னை உருவாக்கவில்லை” என்று கூறலாமோ? வனையப்பட்டது தன்னை வனைந்தவனை நோக்கி “உமக்கு அறிவில்லை” என்று சொல்லலாமோ?ஏசா 24:1 அப் 17:6
17இன்னும் சிறிது காலத்தில் லெபனோன் வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ? வளம் மிகு நிலம் காடாக ஆகிவிடுமன்றோ?ஏசா 63:18 ஆபகூ 2:3 ஆகா 2:6 எபிரெ 10:37
18அந்நாளில் காது கேளாதோர் ஏட்டுச் சுருளின் வார்த்தைகளைக் கேட்பர்: பார்வையற்றோரின் கண்கள் காரிருளிலிருந்தும் மையிருளிலிருந்தும் விடுதலையாகிப் பார்வை பெறும்.ஏசா 29:10-12 ஏசா 29:24-12 ஏசா 35:5 ஏசா 42:16-18 உபா 29:4 சங் 119:18 நீதி 20:12 எரே 31:33 எரே 31:34 மத் 11:5 மத் 13:14-16 மத் 16:17 மாற் 7:37 லூக் 4:18 லூக் 7:22 யோவா 6:45 அப் 26:18 2கொரி 3:14-18 2கொரி 4:2-6 எபே 1:17-19 எபே 5:14 1பேது 2:9 வெளிப் 3:18
19ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்: மானிடரில் வறியவர் இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர்.ஏசா 61:1 சங் 25:9 சங் 37:11 சங் 149:4 செப் 2:3 மத் 5:5 மத் 11:29 கலா 5:22 கலா 5:23 எபே 4:2 பிலிப் 2:1-3 யாக் 1:21 யாக் 2:5 யாக் 3:13-18 1பேது 2:1-3
20கொடியோர் இல்லாதொழிவர்: இகழ்வோர் இல்லாமற் போவர்: தீமையில் நாட்டம் கொள்வோர் அழிந்து போவர்.ஏசா 29:5 ஏசா 13:3 ஏசா 25:4 ஏசா 25:5 ஏசா 49:25 ஏசா 51:13 தானி 7:7 தானி 7:19-25 ஆபகூ 1:6 ஆபகூ 1:7
21அவர்கள் ஒருவர்மேல் பொய்க் குற்றம் சாட்டி, நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை இடறச் செய்கின்றனர்: பொய் புனைந்து நேர்மையாளரின் வழக்கைப் புரட்டுகின்றனர்.நியா 12:6 மத் 22:15 லூக் 11:53 லூக் 11:54
22ஆதலால் ஆபிரகாமை மீட்ட ஆண்டவர் யாக்கோபு வீட்டாரைப் பற்றிக் கூறுவது: இனி யாக்கோபு மானக்கேடு அடைவதில்லை: அவன் முகம் இனி வெளிறிப் போவதுமில்லை.ஏசா 41:8 ஏசா 41:9 ஏசா 41:14 ஏசா 44:21-23 ஏசா 51:2 ஏசா 51:11 ஏசா 54:4 ஆதி 48:16 யோசு 24:2-5 நெகே 9:7 நெகே 9:8 லூக் 1:68 1பேது 1:18 1பேது 1:19 வெளிப் 5:9
23அவன் பிள்ளைகள் என் பெயரைத் தூயதெனப் போற்றுவர்: நான் செய்யவிருக்கும் என் கைவேலைப்பாடுகளைக் காணும்போது யாக்கோபின் தூயவரைத் தூயவராகப் போற்றுவர்: இஸ்ரயேலின் கடவுள்முன் அஞ்சி நிற்பர்.ஏசா 19:25 ஏசா 43:21 ஏசா 45:11 ஏசா 60:21 எபே 2:10
24தவறிழைக்கும் சிந்தை கொண்டோர் உணர்வடைவர்: முறுமுறுப்போர் அறிவுரையை ஏற்றுக் கொள்வர்.ஏசா 29:10 ஏசா 29:11 ஏசா 28:7 சகரி 12:10 மத் 21:28-32 லூக் 7:47 லூக் 15:17-19 அப் 2:37 அப் 6:7 அப் 9:19 அப் 9:20 1கொரி 6:11 1தீமோ 1:13-15 வெளிப் 20:2 வெளிப் 20:3
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.