எரேமியா 25:31-33 - WCV
31
அவரது கர்ச்சனை உலகின் எல்லைவரை எட்டும்: ஏனெனில், ஆண்டவர் மக்களினங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்போகிறார்: அவர் எல்லா மனிதர்க்கும் தீர்ப்பு வழங்கப்போகிறார்: தீயோரை அவர் வாளுக்கு இரையாக்குவார், என்கிறார் ஆண்டவர்.”
32
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ! தீமை நாட்டிலிருந்து நாட்டுக்குப் பரவுகின்றது. பூவுலகின் எல்லைகளிலிருந்து பெரும் புயலொன்று புறப்பட்டுப் போகின்றது.
33
அந்நாளில் ஆண்டவரால் கொல்லப்பட்டவர்கள், உலகின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை விழுந்து கிடப்பார்கள். புலம்புவாரற்று, எடுத்துச் சேர்ப்பாரற்று, புதைப்பாரற்றுத் தரையில் சாணம்போல் கிடப்பார்கள்.