எரேமியா 32:28-32 - WCV
28
ஆதலால், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: கல்தேயரிடமும் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடமும் இந்நகரை நான் கையளிப்பேன். அவனும் அதைக் கைப்பற்றிக்கொள்வான்.
29
இந்நகரை எதிர்த்துப் போரிடும் கல்தேயர் அதன் உள்ளே புகுந்து அதற்குத் தீ வைப்பர்: அதனோடு வீடுகளையும் தீக்கிரையாக்குவர்: ஏனெனில் அந்த வீடுகளின் மேல் தளங்களில்தான் மக்கள் பாகாலுக்குத் தூபம் காட்டினார்கள்: வேற்றுத் தெய்வங்களுக்கு நீர்மப் படையல்களைப் படைத்தார்கள்: இவ்வாறு அவர்கள் எனக்குச் சினமூட்டினார்கள்.
30
இஸ்ரயேல் மக்களும் தங்கள் இளமை முதல் எனது திருமுன் தீமை ஒன்றையே செய்துவந்துள்ளார்கள்: ஆம், இஸ்ரயேல் மக்கள் தங்கள் செயல்களால் எனக்குச் சினமூட்டியதைத் தவிர, வேறு எதுவும் செய்ததில்லை, என்கிறார் ஆண்டவர்.
31
இந்நகர் கட்டியெழுப்பப்பட்டது முதல் இந்நாள்வரை, என் சினத்திற்கும் சீற்றத்திற்கும் காரணமாய் இருந்துள்ளது. எனவே நான் அதை என் திருமுன்னின்று அகற்றி விடுவேன்.
32
ஏனெனில் இஸ்ரயேல் மக்களும் யூதா மக்களும் தங்களது எல்லாத் தீச்செயல்கள் மூலம் எனக்குச் சினமூட்டினார்கள்: அவர்களும் அவர்களுடைய அரசர், தலைவர், குருக்கள், இறைவாக்கினர், யூதா மக்கள், எருசலேம்வாழ் மக்கள் ஆகிய அனைவருமே இவ்வாறு செய்துள்ளார்கள்.