16
பார்வையற்றோரை அவர்கள் அறியாத பாதையில் நடத்திச் செல்வேன்: அவர்கள் பழகாத சாலைகளில் வழிநடத்துவேன்: அவர்கள்முன் இருளை ஒளியாக்குவேன்: கரடுமுரடான இடங்களைச் சமதளமாக்குவேன்: இவை நான் அவர்களுக்காகச் செய்யவிருப்பன: நான் அவர்களைக் கைநெகிழ மாட்டேன்.
17
சிலைகள்மேல் நம்பிக்கை வைப்போரும், படிமங்களிடம், “நீங்கள் எங்கள் தெய்வங்கள்” என்போரும் இழிநிலையடைந்து, மானக்கேடுறுவர்.
18
செவிடரே, கேளுங்கள்: குருடரே, கவனமாய்ப் பாருங்கள்.