அதற்கு அவர் மறுமொழியாக, “நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்: பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்: கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்: தொழுநோயாளர் நலமடைகின்றனர்: காது கேளாதோர் கேட்கின்றனர்: இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர்: ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது.