2
யோசுவா எல்லா மக்களுக்கும் கூறியது:”இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்:”முற்காலத்தில் ஆபிரகாம், நாகோர் ஆகியோரின் தந்தை தேரா உட்பட்ட உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் வாழ்ந்தபொழுது அவர்கள் மற்ற தெய்வங்களுக்கு ஊழியம் செய்தனர்.
3
உங்கள் தந்தையாகிய ஆபிரகாமை நதிக்கு அப்பாலிருந்து அழைத்து வந்து. கானான் நாடு முழுவதிலும் நடத்திச் சென்றேன்: அவனது வழிமரபைப் பெருக்கினேன்: அவனுக்கு ஈசாக்கை அளித்தேன்.
4
ஈசாக்கிற்கு யாக்கோபையும் ஏசாவையும் அளித்தேன்: ஏசாவுக்குச் செபீர் மலையை உடைமையாக அளித்தேன்.யாக்கோபும் அவன் மக்களும் எகிப்திற்குச் சென்றனர்.
5
மோசேயையும் ஆரோனையும் அனுப்பி அங்கே என் செயல்களின் மூலம் எகிப்தை வதைத்தேன்.பின்னர் உங்களை வெளியே கொணர்ந்தேன்.