| 1 | எப்ராயிமின் குடிவெறியரின் மாண்புமிகு மணிமுடிக்கு ஐயோ கேடு! வாடுகின்ற மலராய், அதன் மேன்மை மிகு எழில் குலைகின்றதே! பள்ளத்தாக்கில் அது அமைந்துள்ளதே! நறுமணம் பூசிய தலைவர்கள் மது மயக்கத்தால் வீழ்ந்து கிடக்கின்றனரே! | ஏசா 28:3 ஓசி 5:5 ஓசி 6:10 |
| 2 | இதோ ஆற்றலும் வலிமையும் மிக்கோன் என் தலைவரிடம் உள்ளான்: அவன் கல்மழையென, அழிக்கும் புயலென, கரை புரண்டோடும் பெருவெள்ளமென வந்து, தன் கைவன்மையால் அதைத் தரையில் வீழ்த்துவான். | ஏசா 9:9-12 ஏசா 27:1 எசே 30:10 எசே 30:11 |
| 3 | எப்ராயிம் குடிவெறியரின் மாண்புமிகு மணிமுடி கால்களால் மிதிக்கப்படும். | ஏசா 25:10 ஏசா 26:6 2இரா 9:33 புலம் 1:15 தானி 8:13 எபிரெ 10:29 வெளிப் 11:2 |
| 4 | வாடுகின்ற மலராய் அதன் மேன்மை மிகு எழில் குலைகின்றது: நறுமணம் பூசிய தலைவர்கள் வீழ்ந்து கிடக்கின்றனர்: இது கோடைக்காலம் வரும் முன் பழுத்த அத்திப்பழம் போலாகும்: அதைக் காண்பவன் தன் கைக்கு எட்டியதும் அதை விழுங்கி விடுவான். | ஏசா 28:1 சங் 73:19 சங் 73:20 ஓசி 6:4 ஓசி 9:10 ஓசி 9:11 ஓசி 9:16 ஓசி 13:1 ஓசி 13:15 யாக் 1:10 யாக் 1:11 |
| 5 | அந்நாளில் படைகளின் ஆண்டவரே, தம் மக்களுள் எஞ்சியோருக்கு எழில்மிகு மணிமுடியாகவும் மாண்புமிகு மகுடமாகவும் இருப்பார். | ஏசா 41:16 ஏசா 45:25 ஏசா 60:1-3 ஏசா 60:19-3 ஏசா 62:3 எரே 9:23 எரே 9:24 சகரி 6:13-15 லூக் 2:32 1கொரி 1:30 1கொரி 1:31 2கொரி 4:17 1பேது 5:4 |
| 6 | நீதி வழங்க அமர்வோனுக்கு நீதியின் உணர்வாகவும் நகரவாயிலைத் தாக்குவோர் புறமுதுகிடுமாறு போராடுவோர்க்கு ஆற்றலாகவும் அவர் இருப்பார். | ஏசா 11:2-4 ஏசா 32:15 ஏசா 32:16 ஆதி 41:38 ஆதி 41:39 எண் 11:16 எண் 11:17 எண் 27:16-18 1இரா 3:28 சங் 72:1-4 நீதி 20:8 யோவா 3:34 யோவா 5:30 1கொரி 12:8 |
| 7 | குருக்களும் இறைவாக்கினரும் திராட்சை இரசத்தால் தடுமாறுகின்றனர்: மதுவால் தள்ளாடுகின்றனர்: அவர்கள் மதுவால் மதி மயங்குகின்றனர்: திராட்சை மதுவுக்கு அடிமையாகின்றனர்: மதுவால் மயங்குகின்றனர்: காட்சி காணுகையில் மருள்கின்றனர்: நீதி வழங்குகையில் தடுமாறுகின்றனர்! | ஏசா 19:14 ஏசா 56:10-12 லேவி 10:9 லேவி 10:10 நீதி 20:1 நீதி 31:4 நீதி 31:5 பிரச 10:17 எசே 44:21 ஓசி 4:11 மீகா 2:11 மத் 24:29 லூக் 21:34 எபே 5:28 |
| 8 | மேசைகள் எல்லாம் வாந்தியால் நிறைந்துள்ளன: அழுக்குப் படியாத இடமே இல்லை! | நீதி 26:11 எரே 48:26 ஆபகூ 2:15 ஆபகூ 2:16 |
| 9 | “இவன் யாருக்கு அறிவு புகட்டுவான்? யாருக்குச் செய்தியைப் புரியுமாறு எடுத்துரைப்பான்? பால்குடி மறந்தோர்க்கா? தாய்ப்பாலை விட்டு அகன்றோர்க்கா? | ஏசா 30:10-12 சங் 50:17 நீதி 1:29 எரே 5:31 எரே 6:10 யோவா 3:19 யோவா 12:38 யோவா 12:47 யோவா 12:48 |
| 10 | ஏனெனில் கட்டளை மேல் கட்டளை, கட்டளைமேல் கட்டளை: அளவு நூலுக்குமேல் அளவுநூல், அளவு நூலுக்கு மேல் அளவுநூல்: இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்” என்கின்றனர். | ஏசா 28:13 ஏசா 5:4 உபா 6:1-6 2நாளா 36:15 2நாளா 36:16 நெகே 9:29 நெகே 9:30 எரே 11:7 எரே 25:3-7 மத் 21:34-41 பிலிப் 3:1 2தீமோ 3:7 எபிரெ 5:12 |
| 11 | ஆனால் குழறிய பேச்சும் புரியாத மொழியும் கொண்டோர் மூலம் ஆண்டவர் இம்மக்களுக்குப் பாடம் கற்பிப்பார். | உபா 28:49 எரே 5:15 1கொரி 14:21 |
| 12 | 12”இதோ உள்ளது இளைப்பாற்றி: களைத்தவன் இளைப்பாறட்டும்: இதோ உள்ளது இளைப்பாற்றி” என்று அவர்களுக்குச் சொன்னாலும் செவி கொடுக்க மாட்டார்கள். | ஏசா 30:15 2நாளா 14:11 2நாளா 16:8 2நாளா 16:9 எரே 6:16 மத் 11:28 மத் 11:29 |
| 13 | ஆதலால் ஆண்டவரின் வார்த்தை அவர்களுக்குக் கட்டளைமேல் கட்டளையாகவும் அளவுநூல்மேல் அளவு நூலாகவும் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமாகவும் இருக்கும்: அவர்கள் புறப்பட்டுச்செல்கையில் நிலை தடுமாறி வீழ்வர்: நொறுக்கப்படுவர்: கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவர். | ஏசா 28:10 எரே 23:36-38 ஓசி 6:5 ஓசி 8:12 |
| 14 | ஆதலால், எருசலேமிலுள்ள இம்மக்களை ஆள்வோரே! இகழ்வோரே! ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள். | ஏசா 28:22 ஏசா 1:10 ஏசா 5:9 ஏசா 29:20 நீதி 1:22 நீதி 3:34 நீதி 29:8 ஓசி 7:5 அப் 13:41 |
| 15 | 15”நாங்கள் சாவோடு ஓர் உடன்படிக்கை செய்துள்ளோம்: பாதாளத்துடன் ஓர் உடன்பாடு ஏற்படுத்தியுள்ளோம். பகைவன் பெருவெள்ளமெனப் பாய்ந்துவந்தாலும் அவனால் எங்களை அணுக இயலாது. ஏனெனில், பொய்மையை நாங்கள் எங்கள் புகலிடமாய்க் கொண்டுள்ளோம்: வஞ்சகத்தை எங்களுக்கு மறைவிடமாய் ஆக்கியுள்ளோம்” என்று சொன்னீர்கள். | ஏசா 5:18 ஏசா 5:19 பிரச 8:8 யோபு 5:23 யோபு 15:25-27 எரே 44:17 எசே 8:12 ஓசி 2:18 செப் 1:12 |
| 16 | ஆதலால், ஆண்டவராகிய என் தலைவர் கூறுவது இதுவே: இதோ! சீயோனில் நான் ஓர் அடிக்கல் நாட்டுகின்றேன்: அது பரிசோதிக்கப்பட்ட கல்: விலையுயர்ந்த மூலைக்கல்: உறுதியான அடித்தளமாய் அமையும் கல்:”நம்பிக்கை கொண்டோன் பதற்றமடையான்.” | ஏசா 8:14 ஆதி 49:10 ஆதி 49:24 சங் 118:22 சகரி 3:9 மத் 21:42 மாற் 12:10 லூக் 20:17 லூக் 20:18 அப் 4:11 அப் 4:12 ரோம 9:33 ரோம 10:11 1கொரி 3:11 எபே 2:20 1பேது 2:6-8 |
| 17 | நீதியை அளவு நூலாகவும், நேர்மையைத் தூக்கு நூலாகவும் அமைப்பேன். பொய்மை எனும் புகலிடத்தைக் கல்மழை அழிக்கும்: மறைவிடத்தைப் பெருவெள்ளம் அடித்துச் செல்லும். | ஏசா 10:22 2இரா 21:13 சங் 94:15 ஆமோ 7:7-9 ரோம 2:2 ரோம 2:5 ரோம 9:28 வெளிப் 19:2 |
| 18 | சாவுடன் நீங்கள் செய்த உடன்படிக்கை முறிந்து போகும்: பாதாளத்துடன் நீங்கள் செய்த உடன்பாடு நிலைத்து நிற்காது: பகைவன் பெருவெள்ளமெனப் பாய்ந்து வரும்போது நீங்கள் அவனால் நசுக்கப்படுவீர்கள். | ஏசா 7:7 ஏசா 8:10 எரே 44:28 எசே 17:15 சகரி 1:6 |
| 19 | பகை உங்களைக் கடக்கும் பொழுதெல்லாம் உங்களை வாரிக்கொண்டு போகும்: அது காலைதோறும், பகலும் இரவும், பாய்ந்து வரும்: அச்செய்தியை உணர்வதே மிகவும் திகிலூட்டும். | ஏசா 10:5 ஏசா 10:6 2இரா 17:6 2இரா 18:13 எசே 21:19-23 |
| 20 | கால் நீட்டப் படுக்கையின் நீளம் போதாது: போர்த்திக் கொள்ளப் போர்வையின் அகலம் பற்றாது. | ஏசா 57:12 ஏசா 57:13 ஏசா 59:5 ஏசா 59:6 ஏசா 64:6 ஏசா 66:3-6 எரே 7:8-10 ரோம 9:30-32 1கொரி 1:18-31 |
| 21 | ஆண்டவர் பெராசிம் மலைமேல் கிளர்ந்தெழுந்ததுபோல் எழுவார்! கிபயோன் பள்ளத்தாக்கில் செய்ததுபோல் செயலாற்றக் கொதித்தெழுவார்! தம் பணியை நிறைவேற்றுவார்! விந்தையானது அவர் தம் செயல்! புதிரானது அவர்தம் பணி! | 2சாமு 5:20 1நாளா 14:11 |
| 22 | உங்கள் தளைகள் கடினமாகாதபடி இகழ்வதை விட்டுவிடுங்கள்: ஏனெனில் நாடு முழுவதையும் அழித்தொழிக்குமாறு படைகளின் ஆண்டவராகிய என் தலைவர் இட்ட ஆணையை நான் கேட்டேன். | ஏசா 28:15 2நாளா 30:10 2நாளா 36:16 எரே 15:17 எரே 20:7 மத் 27:39 மத் 27:44 அப் 13:40 அப் 13:41 அப் 17:32 |
| 23 | செவி கொடுங்கள்: நான் கூறுவதைக் கேளுங்கள்: செவிசாய்த்து நான் சொல்வதைக் கவனியுங்கள்: | ஏசா 1:2 உபா 32:1 எரே 22:29 வெளிப் 2:7 வெளிப் 2:11 வெளிப் 2:14 வெளிப் 2:29 |
| 24 | விதைப்பதற்கென உழுபவர்கள் நாள்தோறும் உழுது கொண்டிருப்பார்களா? நிலத்தை நாள்தோறும் கிளறிப் பரம்படிப்பார்களா? | எரே 4:3 ஓசி 10:11 ஓசி 10:12 |
| 25 | அதன் மேற்பரப்பைச் சமமாக்கியபின் உளுந்தைத் தூவிச் சீரகத்தை விதைப்பார்களன்றோ? வாற்கோதுமையைக் கோதுமைப் பாத்திகளிலும், தானியங்களை ஓரங்களில் உரிய இடத்திலும் விதைப்பார்களன்றோ? | யாத் 9:31 யாத் 9:32 எசே 4:9 |
| 26 | இந்த நடைமுறையை அவர்கள் கற்றுக் கொள்கின்றார்கள்: அவர்களின் கடவுள் அவர்களுக்குக் கற்றுத் தருகின்றார்: | யாத் 28:3 யாத் 31:3-6 யாத் 36:2 யோபு 35:11 யோபு 39:17 சங் 144:1 தானி 1:17 யாக் 1:17 |
| 27 | உளுந்து இருப்புக் கோலால் அடிக்கப்படுவதில்லை: சீரகத்தின் மேல் வண்டி உருளை உருட்டப்படுவதில்லை: ஆனால் உளுந்து கோலாலும் சீரகம் தடியாலும் தட்டியடிக்கப்படும். | ஏசா 41:15 2இரா 13:7 ஆமோ 1:3 |
| 28 | உணவுக்கான தானியத்தை யாரும் நொறுக்குவார்களா? இல்லை: அதை அவர்கள் இடைவிடாது போரடிப்பதில்லை. வண்டி உருளையையும் குதிரையையும் அதன்மேல் ஓட்டும்போது, அதை அவர்கள் நொறுக்குவதில்லை. | ஏசா 21:10 ஆமோ 9:9 மத் 3:12 மத் 13:37-43 லூக் 22:31 லூக் 22:32 யோவா 12:24 1கொரி 3:9 1கொரி 9:9 1கொரி 9:10 |
| 29 | படைகளின் ஆண்டவரிடமிருந்து இந்த அறிவு வருகின்றது: அவர் திட்டமிடுவதில் வியப்புக்குரியவர்: செயற்படுத்தும் அறிவில் சிறப்புக்குரியவர். | ஏசா 28:21 ஏசா 28:22 ஏசா 9:6 யோபு 5:9 யோபு 37:23 சங் 40:5 சங் 92:5 எரே 32:19 தானி 4:2 தானி 4:3 ரோம 11:33 |