16
”உயிர்க்கு எல்லாம் கடவுளாகிய ஆண்டவர் இந்த மக்கள் கூட்டமைப்புக்கு ஒருவனைப் பொறுப்பாளனாக ஏற்படுத்துவாராக:
17
அவன் அவர்களுக்கு முன்னே போகவும், அவர்களுக்கு முன்னே வரவும் வேண்டும்: அவ்வாறே வெளியே நடத்திச் செல்லவும் உள்ளே அழைத்து வரவும் வேண்டும்.இதனால் ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்பு மேய்ப்பனில்லா ஆடுகளாக இராது” என்றார்.
18
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நூன் புதல்வன் யோசுவாவைத் தேர்ந்துகொள்: அவன் ஆவியைத் தன்னுள் கொண்டவன்: நீ அவன் மேல் உன் கையை வை.