இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ஏசாயா 27

                   
புத்தகங்களைக் காட்டு
1அந்நாளில் ஆண்டவர் தம் கொடிய, பெரிய, வலிமைமிகு வாளால் லிவியத்தான் என்னும் விரைந்தோடும் பாம்பை-லிவியத்தான் என்னும் நெளிந்தோடும் பாம்பை-தண்டிப்பார்: கடலில் இருக்கும் அந்தப் பெரும் நாகத்தை அவர் வெட்டி வீழ்த்துவார்.ஏசா 26:21
2அந்நாளில் ஒரு கனிமிகு திராட்சைத்தோட்டம் இருக்கும்: அதைப்பற்றிப் பாடுங்கள்.ஏசா 5:1-7 எண் 21:17
3ஆண்டவராகிய நானே அதன் பாதுகாவலர்: இடையறாது அதற்கு நான் நீர் பாய்ச்சுகின்றேன்: எவரும் அதற்குத் தீங்கு விளைவிக்காதவாறு இரவும் பகலும் அதற்குக் காவலாய் இருக்கின்றேன்.ஏசா 46:4 ஏசா 46:9 ஏசா 60:16 ஆதி 6:17 ஆதி 9:9 எசே 34:11 எசே 34:24 எசே 37:14 எசே 37:28
4சினம் என்னிடம் இல்லை: நெருஞ்சியையும் முட்புதரையும் என்னோடு போரிடச் செய்தவன் எவன்? நான் அவற்றிற்கு எதிராக அணி வகுத்துச்சென்று, அவற்றை ஒருங்கே நெருப்புக்கு இரையாக்குவேன்.ஏசா 12:1 ஏசா 26:20 ஏசா 26:21 ஏசா 54:6-10 சங் 85:3 சங் 103:9 எசே 16:63 நாகூ 1:3-7 2பேது 2:9
5அவர்கள் என்னைப் புகலிடமாகக் கொண்டு வலிமை பெறட்டும்: என்னோடு அவர்கள் ஒப்புரவு செய்து கொள்ளட்டும், என்னோடு அவர்கள் சமாதானம் செய்து கொள்ளட்டும்.ஏசா 25:4 ஏசா 26:3 ஏசா 26:4 ஏசா 45:24 ஏசா 56:2 ஏசா 64:7 யோசு 9:24 யோசு 9:25 யோசு 10:6 யோபு 22:21 லூக் 13:34 லூக் 14:32 லூக் 19:42 எபிரெ 6:18
6வருங்காலத்தில் யாக்கோபு வேரூன்றி நிற்பான்: இஸ்ரயேல் பூத்து மலருவான்: உலகத்தையெல்லாம் கனிகளால் நிரப்புவான்.ஏசா 6:13 ஏசா 37:31 ஏசா 49:20-23 ஏசா 54:1-3 ஏசா 60:22 சங் 92:13-15 எரே 30:19 ஓசி 2:23 ஓசி 14:5 ஓசி 14:6 சகரி 2:11 சகரி 10:8 சகரி 10:9 ரோம 11:16-26 கலா 3:29 பிலிப் 3:3 வெளிப் 11:15
7அவனை அடித்து நொறுக்கியோரை ஆண்டவர் அடித்து நொறுக்கியது போல், அவனையும் அவர் அடித்து நொறுக்கியது உண்டோ? அவனை வெட்டி வீழ்த்தியோரை அவர் வெட்டி வீழ்த்தியதுபோல், அவனையும் அவர் வெட்டி வீழ்த்தியது உண்டோ?ஏசா 10:20-25 ஏசா 14:22 ஏசா 14:23 ஏசா 17:3 ஏசா 17:14 எரே 30:11-16 எரே 50:33 எரே 50:34 எரே 50:40 எரே 51:24 தானி 2:31-35 நாகூ 1:14 நாகூ 3:19
8துரத்தியடித்து வெளியேற்றியதன் மூலம் அவர் அவனோடு போராடினார்: கீழைக்காற்றின் நாளில் சூறைக்காற்றால் அவனைத் தூக்கி எறிந்தார்.ஏசா 57:16 யோபு 23:6 சங் 6:1 சங் 38:1 சங் 103:14 எரே 10:24 எரே 30:11 எரே 46:28 1கொரி 10:13 1பேது 1:6
9ஆதலால் இதன் வாயிலாய் யாக்கோபின் குற்றத்திற்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றப்படும். அவனது பாவம் அகற்றப்பட்டதன் முழுப் பயன் இதுவே: சுண்ணாம்புக் கற்களை உடைத்துத் தூள் தூளாக்குவது போல அவர் அவர்களின் பலிபீடக் கற்களுக்குச் செய்வார்: அசேராக் கம்பங்களும் தூபபீடங்களும் நிலைநிற்காதவாறு நொறுக்கப்படும்.ஏசா 1:24 ஏசா 1:25 ஏசா 4:4 ஏசா 48:10 சங் 119:67 சங் 119:71 நீதி 20:30 எசே 20:38 எசே 24:13 தானி 11:35 மல்கி 3:2 மல்கி 3:3 1கொரி 11:32 எபிரெ 12:6 எபிரெ 12:9-11
10அரண் சூழ்ந்த நகரம் தனித்து விடப்பட்டுள்ளது: குடியிருப்பாரின்றிப் பாழாய்க் கிடக்கிறது. பாலைநிலம் போல் புறக்கணிக்கப்பட்டுள்ளது: ஆங்கே, கன்றுக்குட்டி மேய்கின்றது, படுத்துக்கிடக்கின்றது: அதில் தழைத்துள்ளவற்றைத் தின்று தீர்க்கின்றது.ஏசா 5:9 ஏசா 5:10 ஏசா 6:11 ஏசா 6:12 ஏசா 17:9 ஏசா 25:2 ஏசா 64:10 எரே 26:6 எரே 26:18 புலம் 1:4 புலம் 2:5-9 புலம் 5:18 எசே 36:4 மீகா 3:12 லூக் 19:43 லூக் 19:44 லூக் 21:20-24
11உலர்ந்த அதன் கிளைகள் முறிக்கப்படுகின்றன: பென்டிர் வந்து அவற்றைச் சுட்டெறிப்பர்: ஏனெனில் உணர்வற்ற மக்களினம் அது: ஆதலால், அவர்களைப் படைத்தவர் அவர்கள் மீது இரக்கம் காட்டார்: அவர்களுக்கு ஆதரவு அருளார்.சங் 80:15 சங் 80:16 எசே 15:2-8 எசே 20:47 மத் 3:10 யோவா 15:6
12அந்நாளில் ஆண்டவர் பேராற்றின் வாய்க்கால் முதல் எகிப்தின் பள்ளத்தாக்குவரை புணையடிப்பார்: இஸ்ரயேல் மக்களே, நீங்கள் ஒருவர்பின் ஒருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள்.ஏசா 11:11-16 ஏசா 24:13-16 ஏசா 56:8 ஆதி 15:18 சங் 68:22 சங் 72:8
13அந்நாளில் பெரியதோர் எக்காளம் முழங்கும். அப்பொழுது, அசீரியா நாட்டில் சிதறுண்டோரும் எகிப்து நாட்டுக்குத் துரத்தப்பட்டோரும் திரும்பி வருவர். எருசலேமின் திருமலையில் அவர்கள் ஆண்டவரை வழிபடுவார்கள்.ஏசா 2:11
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.