| 1 | அந்நாளில் யூதா நாட்டில் இந்தப் பாடல் பாடப்படும்: நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு: நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்: | ஏசா 2:11 ஏசா 2:20 ஏசா 12:1 ஏசா 24:21-23 ஏசா 25:9 |
| 2 | வாயில்களைத் திறந்துவிடுங்கள்: அவர்மீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும். | ஏசா 60:11 ஏசா 62:10 சங் 118:20 எசே 48:31-34 சகரி 8:20 அப் 2:47 வெளிப் 21:24 |
| 3 | அவர்கள் மனஉறுதி கொண்டவர்கள்: உம்மீது நம்பிக்கை உடையவர்கள்: அவர்களை அமைதியால் நீர் உறுதிப்படுத்துகின்றீர். | ஏசா 9:6 ஏசா 9:7 ஏசா 57:19-21 சங் 85:7 சங் 85:8 மீகா 5:5 யோவா 14:27 யோவா 16:33 ரோம 5:1 எபே 2:14-16 பிலிப் 4:7 |
| 4 | ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்: ஏனெனில், ஆண்டவர், என் ஆண்டவர் என்றுமுள கற்பாறை! | ஏசா 12:2 ஏசா 50:10 2நாளா 20:20 2நாளா 32:8 சங் 55:22 சங் 62:8 நீதி 3:5 நீதி 3:6 |
| 5 | உயரத்தில் வாழ்வோரை அவர் தாழ்த்துகின்றார்: வானுற உயர்ந்த நகரைத் தகர்க்கின்றார்: அதைத் தரைமட்டமாக்கி, புழுதியோடு புழுதியாக, மண்ணோடு மண்ணாகச் செய்கின்றார். | ஏசா 2:12 ஏசா 13:11 ஏசா 14:13 ஏசா 25:11 யோபு 40:11-13 |
| 6 | காலடிகள்-எளியோரின் காலடிகளும் ஏழைகளின் பாதங்களும்-அதை மிதிக்கும். | ஏசா 25:10 ஏசா 37:25 ஏசா 60:14 யோசு 10:24 எரே 50:45 தானி 7:27 செப் 3:11 மல்கி 4:3 லூக் 1:51-53 லூக் 10:19 ரோம 16:20 1கொரி 1:26 யாக் 2:5 வெளிப் 2:26 வெளிப் 3:9 |
| 7 | நீதிமான்களின் நெறிகள் நேரியவை: நீர் நேர்மையாளரின் வழியைச் செம்மையாக்குகின்றீர். | ஏசா 35:8 1நாளா 29:17 யோபு 27:5 யோபு 27:6 சங் 18:23-26 நீதி 20:7 2கொரி 1:12 எபே 2:10 1யோவா 3:7 1யோவா 3:10 |
| 8 | ஆண்டவரே, உமது நீதியின் நெறியில் நடந்து, உமக்காகக் காத்திருக்கிறோம், உமது திருப்பெயரும் உமது நினைவும் எங்களுக்கு இன்பமாய் உள்ளன. | ஏசா 64:4 ஏசா 64:5 எண் 36:13 யோபு 23:10-12 சங் 18:23 சங் 44:17 சங் 44:18 சங் 65:6 சங் 106:3 மல்கி 4:4 லூக் 1:6 |
| 9 | என் நெஞ்சம் இரவில் உம்மை நாடுகின்றது: எனக்குள்ளிருக்கும் ஆவி ஏக்கத்தோடு உம்மைத் தேடுகின்றது: உம் நீதித்தீர்ப்புகள் நிலவுலகில் நிலைத்திருக்கையில் வாழ்வோர் நேர்மையைக் கற்றுக் கொள்வர். | சங் 63:6 சங் 63:7 சங் 77:2 சங் 77:3 சங் 119:62 சங் 130:6 உன்ன 3:1-4 உன்ன 5:2-8 லூக் 6:12 |
| 10 | கொடியவர்களுக்கு நீர் இரக்கம் காட்டினாலும் அவர்கள் நேரியன செய்யக் கற்றுக் கொள்வதில்லை: நேர்மை நிறைந்த நாட்டில் அவர்கள் அநீதி செய்கின்றனர்: ஆண்டவரின் மாட்சியை அவர்கள் காண்பதில்லை. | ஏசா 63:9 ஏசா 63:10 யாத் 8:15 யாத் 8:31 யாத் 8:32 யாத் 9:34 உபா 32:15 1சாமு 15:17 சங் 106:43 நீதி 1:32 பிரச 3:16 ஓசி 13:6 ரோம 2:4 ரோம 2:5 வெளிப் 2:21 |
| 11 | ஆண்டவரே, ஓங்கிய உம் கையை அவர்கள் காண்பதில்லை: உம் மக்கள்மீது நீர் கொண்ட பேரார்வத்தை அவர்கள் கண்டு நாணட்டும்! உம் பகைவர்களுக்காக மூட்டிய தீ அவர்களை விழுங்கட்டும்! | சங் 10:12 மீகா 5:9 |
| 12 | ஆண்டவரே, நிறைவாழ்வை நீர் எங்களுக்கு உரியதாக்குவீர்! ஏனெனில், எங்கள் செயல்கள் அனைத்தையும் எங்களுக்காகச் செய்கின்றவர் நீரே. | ஏசா 57:10 சங் 29:11 எரே 33:6 யோவா 14:27 |
| 13 | எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உம்மைத்தவிர வேறு தலைவர்கள் எங்கள்மேல் ஆட்சி செலுத்தினார்கள்: ஆனால், உமது பெயரைமட்டுமே நாங்கள் போற்றுகின்றோம். | ஏசா 51:22 2நாளா 12:8 யோவா 8:32 ரோம 6:22 |
| 14 | அவர்கள் செத்து மடிந்தார்கள், இனி உயிர்வாழ மாட்டார்கள். அவர்களின் நிழல்கள் உயிர்பெற்றெழ மாட்டா: ஏனெனில் நீர் அவர்களைத் தண்டித்து, அழித்துவிட்டீர்: அவர்களைப் பற்றிய நினைவுகள் யாவற்றையும் இல்லாததொழித்தீர். | ஏசா 26:19 ஏசா 8:19 ஏசா 51:12 ஏசா 51:13 யாத் 14:30 சங் 106:28 ஆபகூ 2:18-20 மத் 2:20 வெளிப் 18:2 வெளிப் 18:3 வெளிப் 19:19-21 வெளிப் 20:5 |
| 15 | இந்த இனம் வளரச் செய்தீர்: ஆண்டவரே, இந்த இனம் வளரச் செய்தீர்: நீர் மாட்சியுடன் விளங்குகின்றீர்: நாட்டின் எல்லைகள் அனைத்தையும் விரிவுபடுத்தினீர். | ஏசா 9:3 ஏசா 10:22 ஆதி 12:2 ஆதி 13:16 எண் 23:10 உபா 10:22 நெகே 9:23 எரே 30:19 |
| 16 | ஆண்டவரே, துயரத்தில் உம்மைத் தேடினோம்: நீர் எங்களைத் தண்டிக்கும்போது, உம்மை நோக்கி மன்றாடினோம். | உபா 4:29 உபா 4:30 நியா 10:9 நியா 10:10 2நாளா 6:37 2நாளா 6:38 2நாளா 33:12 2நாளா 33:13 சங் 50:15 சங் 77:1 சங் 77:2 சங் 91:15 எரே 22:23 ஓசி 5:15 ஓசி 7:14 வெளிப் 3:19 |
| 17 | பேறுகாலம் நெருங்குகையில், கருவுற்றவள் தன் வேதனையில் வருந்திக் கதறுவதுபோல், ஆண்டவரே, நாங்களும் உம் முன்னிலையில் இருக்கின்றோம்! | ஏசா 13:8 ஏசா 21:3 சங் 48:6 எரே 4:31 எரே 6:24 எரே 30:6 யோவா 16:21 1தெச 5:3 |
| 18 | நாங்களும் கருவுற்று வேதனையில் துடித்தோம்: ஆனால், காற்றைப் பெற்றெடுத்தவர் போலானோம்: நாடு விடுதலை பெற, நாங்கள் எதையும் சாதிக்கவில்லை: உலகில் குடியிருக்க, எவரும் பிறக்கப் போவதில்லை. | ஏசா 37:3 2இரா 19:3 ஓசி 13:13 |
| 19 | இறந்த உம்மக்கள் உயிர் பெறுவர்: அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும்: புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்: ஏனெனில், நீர் பெய்விக்கும் பனி ஒளியின் பனி: இறந்தோர் நிழல்களின் நாட்டிலும் அதை விழச்செய்கின்றீர். | ஏசா 25:8 எசே 37:1-14 ஓசி 6:2 ஓசி 13:14 யோவா 5:28 யோவா 5:29 அப் 24:15 1கொரி 15:22 1கொரி 15:23 1தெச 4:14 1தெச 4:15 வெளிப் 20:5 வெளிப் 20:6 வெளிப் 20:12 |
| 20 | என் மக்களே! நீங்கள் போய் உங்கள் அறைக்குள் நுழைந்து, உள்ளிருந்து கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள்: கடும் சினம் தணியும்வரை சற்று ஒளிந்து கொள்ளுங்கள். | ஏசா 51:4 ஏசா 51:16 எரே 7:23 எரே 31:14 |
| 21 | மண்ணுலகில் வாழ்வோர் தமக்கு எதிராகச் செய்த தீச் செயலுக்குத் தண்டனை வழங்க, ஆண்டவர் தம் திருத்தலத்திலிருந்து புறப்படுகின்றார்: மண்ணுலகம் தன் இரத்தப்பழியை வெளிக் கொணரும்: அதில் கொலை செய்யப்பட்டவர்களை இனியும் இது மூடிமறைக்காது. | ஏசா 18:4 சங் 50:2 சங் 50:3 எசே 8:6 எசே 9:3-6 எசே 10:3-5 எசே 10:18-5 எசே 10:19-5 ஓசி 5:14 ஓசி 5:15 மீகா 1:3-8 2தெச 1:7-10 யூதா 1:14 யூதா 1:15 |