31
நகர் வாயில்கள் இஸ்ரயேலின் குலங்களின் பெயரால் அழைக்கப்படும்: வடக்குப் புறத்தில் உள்ள மூன்று வாயில்களில் ஒன்று “ரூபனின் வாயில்”, ஒன்று “யூதாவின் வாயில்”, ஒன்று “லேவியின் வாயில்”.
32
கிழக்குப் புறத்தில் நாலாயிரத்து ஐந்நூறு கோல் அளவுப் பகுதியில் உள்ள மூன்று வாயில்களில் ஒன்று “யோசேப்பின் வாயில்”, ஒன்று 'பென்யமின் வாயில்', ஒன்று “தாணின் வாயில்”.
33
தெற்குப் புறத்தில் நாலாயிரத்து ஐந்நூறு கோல் அளவுப் பகுதியில் உள்ள மூன்று வாயில்களில் ஒன்று “சிமியோனின் வாயில்”, ஒன்று “இசக்காரின் வாயில்”, ஒன்று”செபுலோனின் வாயில்”.
34
மேற்குப் புறத்தில் நாலாயிரத்து ஐந்நூறு கோல் அளவுப் பகுதியில் உள்ள மூன்று வாயில்களில் ஒன்று “காத்தின் வாயில்”, ஒன்று “ஆசேரின் வாயில்”, ஒன்று “நப்தலியின் வாயில்”.