யாத்திராகமம் 31:3-6 - WCV
3
ஞானம், அறிவுக்கூர்மை, அனுபவம், தொழில்திறமை அனைத்தும் அவனுக்கு உண்டாகுமாறு நான் அவனை இறை ஆவியால் நிரப்பியுள்ளேன்.
4
இதனால் அவன் பொன், வெள்ளி, வெண்கல வேலை செய்யவும், பதிக்க வேண்டிய கற்களுக்குப் பட்டை தீட்டவும்,
5
மரத்தைச் செதுக்கவும் மற்றெல்லாவித நுண்ணிய வேலைகள் செய்யவும் வேண்டிய திட்டமிடும் நுட்பத்திறன் பெற்றுள்ளான்.
6
மேலும், தாண் குலத்தைச் சார்ந்த அகிசமாக்கின் மகன் ஒகொலியாபு என்பவனையும் நான் அவனோடு நியமித்துள்ளேன்.ஞானமுள்ளோர் அனைவரின் உள்ளத்திலும் நானே ஞானம் அருளியுள்ளதால், அவர்கள் நான் உனக்குக் கட்டளையிட்டபடி அனைத்தையும் செய்வர். அவையாவன: