ஏசாயா 30:10-12 - WCV
10
திருப்பார்வையாளரிடம் அவர்கள் “திருப்பார்வை காண வேண்டாம்” என்றும், திருக்காட்சியாளரிடம், “எங்களுக்கென உண்மையானவற்றைக் காட்சி காணவேண்டாம்: இனிமையானவற்றை எங்களுக்குக் கூறுங்கள்: மாயமானவற்றையே கண்டு சொல்லுங்கள்:
11
தடம் மாறிச் செல்லுங்கள்: நெறியை விட்டு விலகுங்கள்: இஸ்ரயேலின் தூயவரை எங்கள் பார்வையிலிருந்து அகற்றுங்கள்” என்கிறார்கள்.
12
ஆதலால் இஸ்ரயேலின் தூயவர் கூறுவது இதுவே: என் எச்சரிக்கையை நீங்கள் அவமதித்தீர்கள்: அடக்கி ஆள்வதிலும் ஒடுக்குவதிலும் நம்பிக்கை வைத்தீர்கள்: அவற்றையே பற்றிக் கொண்டிருந்தீர்கள்.