அப்பொழுது புனிதர் ஒருவர் பேசுவதைக் கேட்டேன். வேறொரு புனிதர் முன்பு பேசியவரிடம், “இடையறாது செலுத்தப்பட்ட எரிபலியையும், நடுங்கவைக்கும் குற்றத்தையும் தூயகமும் வான் படைகளும் மிதிபடுவதற்குக் கையளிக்கப்படுவதையும் பற்றிய இந்தக் காட்சி இன்னும் எத்தனை நாள் நீடிக்கும்?” என்று கேட்டார்.