ஆயினும் உன்னிடம் நான் காணும் குறைகள் சில உண்டு: பிலயாமின் போதனையில் பிடிப்புள்ள சிலர் உன் நடுவே உள்ளனர். இந்தப் பிலயாம்தான் இஸ்ரயேல் மக்கள் இடறிவிழும்படி செய்யப் பாலாக்குக்குக் கற்றுக்கொடுத்தவன். அதனால் அவர்கள் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்டு பரத்தைமையில் ஈடுபட்டார்கள்.