10
அவர்களின் சாமக்காவலர் அனைவரும் குருடர், அறிவற்றவர்: அவர்கள் அனைவரும் குரைக்க இயலா ஊமை நாய்கள்: படுத்துக்கிடந்து கனவு காண்கின்றவர்கள்: தூங்குவதையே விரும்புகின்றவர்கள்.
11
தீராப் பசிகொண்ட நாய்கள்: நிறைவு என்பதையே அறியாதவர்: பகுத்தறிவு என்பதே இல்லாத மேய்ப்பர்: அவர்கள் அனைவரும் அவரவர் தம் வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர்: ஒவ்வொருவரும் தம் சொந்த ஆதாயத்தைத் தேடுகின்றனர்.
12
ஒவ்வொருவரும், “வாருங்கள்: நான் திராட்சை இரசம் கொண்டு வருவேன்: போதையேற நாம் மது அருந்துவோம்: நாளை இன்று போலும் இதைவிடச் சிறப்பாகவும் அமையும்” என்கின்றனர்.