சகரியா 14:1-3 - WCV
1
இதோ! ஆண்டவரின் நாள் வருகின்றது, அப்போது உன்னிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பொருள்கள் உன் கண்ணெதிரே பங்கிடப்படும்.
2
எருசலேமுக்கு எதிராகப் போர்தொடுக்கும்படி நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்று கூட்டப்போகிறேன்: நகர் பிடிபடும்: வீடுகள் கொள்ளையிடப்படும்: பெண்கள் மானபங்கப்படுத்தப்படுவார்கள்: நகர் மக்களுள் பாதிப்பேர் அடிமைகளாய் நாடு கடத்தப்படுவார்கள்: ஆனால், எஞ்சியுள்ள மக்களோ, நகரிலிருந்து துரத்தப்படமாட்டார்கள்.
3
பின்பு, ஆண்டவர் கிளம்பிச்சென்று, முன்னாளில் செய்ததுபோல் அந்த வேற்றினத்தாருக்கு எதிராகப் போர்புரிவார்.