14
இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: “நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்கும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணர்வதில்லை.
15
இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது: காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்: எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன். “
16
உங்கள் கண்களோ பேறுபெற்றவை: ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை: ஏனெனில் அவை கேட்கின்றன.