| 1 | என் தலை தண்ணீரால் நிறைந்ததாயும் என் கண்கள் கண்ணீரின் ஊற்றுமாயும் இருக்கக் கூடாதா? அப்படியானால், என் மகளாம் மக்களுள் கொலையுண்டோருக்காக இரவும் பகலும் நான் அழுதிருப்பேனே! | எரே 4:19 எரே 13:17 எரே 14:17 சங் 119:136 ஏசா 16:9 ஏசா 22:4 புலம் 2:11 புலம் 2:18 புலம் 2:19 புலம் 3:48 புலம் 3:49 எசே 21:6 எசே 21:7 |
| 2 | பாலை நிலத்தில் பயணியர் விடுதி ஒன்று எனக்கு இருக்கக் கூடாதா? நான் மக்களைப் புறக்கணித்து அவர்களிடமிருந்து சென்று விடலாமே! ஏனெனில், அவர்கள் யாவரும் விபசாரிகள், நம்பிக்கைத் துரோகிகளின் கூட்டம். | சங் 55:6-8 சங் 120:5-7 மீகா 7:1-7 |
| 3 | பொய்பேசத் தங்கள் நாவை வில்லைப்போல் அவர்கள் வளைக்கின்றனர்: உண்மைக்காக நாட்டில் யாரும் நிமிர்ந்து நிற்பதில்லை: அவர்கள் தீமையிலிருந்து தீமைக்கே சென்று கொண்டிருக்கிறார்கள்: என்னையோ அவர்கள் அறிந்து கொள்ளவில்லை, என்கிறார் ஆண்டவர். | எரே 9:5 எரே 9:8 சங் 52:2-4 சங் 64:3 சங் 64:4 சங் 120:2-4 ஏசா 59:3-5 ஏசா 59:13-15 மீகா 7:3-5 ரோம 3:13 |
| 4 | ஒவ்வொருவரும் அடுத்திருப்பவரைப் பொறுத்தவரை எச்சரிக்கையாய் இருக்கட்டும். எந்த உறவினரையும் நம்பவேண்டாம். ஏனெனில், எல்லா உறவினரும் ஏமாற்றுவர் என்பது உறுதி: அடுத்திருப்பவர் அனைவரும் புறணி பேசுகின்றனர்: | எரே 12:6 சங் 12:2 சங் 12:3 சங் 55:11 சங் 55:12 நீதி 26:24 நீதி 26:25 மீகா 7:5 மீகா 7:6 மத் 10:17 மத் 10:21 மத் 10:34 மத் 10:35 லூக் 21:16 |
| 5 | எல்லாரும் அடுத்திருப்பவரை ஏமாற்றுகின்றனர்: யாருமே உண்மை பேசுவதில்லை: பொய் பேசத் தங்கள் நாவைப் பழக்கியுள்ளார்கள்: குற்றம் புரிந்தே சோர்ந்து போனார்கள். | எரே 9:5 எரே 9:8 ஏசா 59:13-15 மீகா 6:12 எபே 4:25 |
| 6 | நீயோ வஞ்சனை செய்வார் நடுவில் வாழ்கின்றாய்: தங்கள் வஞ்சனையின் காரணமாக என்னை அவர்கள் அறிந்து கொள்ள மறுக்கின்றார்கள், என்கிறார் ஆண்டவர். | எரே 11:19 எரே 18:18 எரே 20:10 சங் 120:2-6 |
| 7 | எனவே, படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: நான் அவர்களைப் புடமிடுவேன்: பரிசோதிப்பேன்: என் மகளாகிய மக்களுக்கு நான் வேறு என்னதான் செய்யமுடியும்? | எரே 6:29 எரே 6:30 ஏசா 1:25 ஏசா 48:10 எசே 22:18-22 எசே 26:11 எசே 26:12 சகரி 13:9 மல்கி 3:3 1பேது 1:7 1பேது 4:12 |
| 8 | அவர்கள் நாக்கு கொல்லும் அம்பு: அது பேசுவது வஞ்சனை: எல்லாரும் தம் வாயால் அடுத்திருப்பவர்களோடு சமாதானமாய்ப் பேசுகின்றனர்: உள்ளத்திலோ அவர்களுக்குக் குழி பறிக்கின்றனர். | எரே 9:3 எரே 9:5 சங் 12:2 சங் 57:4 சங் 64:3 சங் 64:4 சங் 64:8 சங் 120:3 |
| 9 | இவற்றின் பொருட்டு நான் அவர்களைத் தண்டியாமல் விடுவேனோ? இப்படிப்பட்ட ஒரு மக்களினத்தாரை நான் பழிவாங்காமல் இருப்பேனோ? என்கிறார் ஆண்டவர். | எரே 5:9 எரே 5:29 ஏசா 1:24 |
| 10 | மலைகளைக் குறித்து அழுது புலம்புவோம்: பாழ்வெளி மேய்ச்சல் நிலத்தின் பொருட்டு ஒப்பாரி வைப்போம்: ஏனெனில் அனைத்தும் தீய்ந்து போயின: அவை வழியாய்ச் செல்வோர் யாருமில்லை: கால்நடைகளின் ஒலியும் கேட்கவில்லை: வானத்துப் பறவைகள் முதல் விலங்குகள் வரை அனைத்துமே ஓடி மறைந்து விட்டன. | எரே 4:19-26 எரே 7:29 எரே 8:18 எரே 13:16 எரே 13:17 புலம் 1:16 புலம் 2:11 |
| 11 | எருசலேமை அழித்துக் கற்குவியலாக்குவேன்: அதனைக் குள்ளநரிகளின் வளையாக்குவேன்: யூதா நகர்களை யாரும் வாழாப் பாழ்வெளியாக்குவேன். | எரே 26:18 எரே 51:37 நெகே 4:2 சங் 79:1 ஏசா 25:2 மீகா 1:6 மீகா 3:12 |
| 12 | இதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஞானமுள்ளவர் எவர்? இதை அறிவிக்குமாறு எவருக்கு ஆண்டவர் வாய்மொழியாகக் கூறியுள்ளார்? நாடு அழிந்து ஆள் நடமாட்டம் இல்லாத பாலை நிலம் போல் தீய்ந்துவிட்டது ஏன்? | உபா 32:29 சங் 107:43 ஓசி 14:9 மத் 24:15 வெளிப் 1:3 |
| 13 | ஆண்டவர் கூறுவது: நான் அவர்களுக்குக் கொடுத்த சட்டத்தைப் புறக்கணித்தார்கள். என் சொல்லுக்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை: அதன்படி நடக்கவும் இல்லை. | எரே 22:9 உபா 31:16 உபா 31:17 2நாளா 7:19 எஸ்றா 9:10 சங் 89:30 சங் 119:53 நீதி 28:4 செப் 3:1-6 |
| 14 | மாறாகத் தங்கள் பிடிவாதத்தின்படி நடந்தார்கள்: தங்கள் மூதாதையர் கற்றுக்கொடுத்தபடி பாகாலைப் பின்பற்றினார்கள். | எரே 3:17 எரே 7:24 ஆதி 6:5 ரோம 1:21-24 எபே 2:3 எபே 4:17-19 |
| 15 | ஆதலால் இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இம்மக்கள் எட்டிக்காய் உண்ணச் செய்வேன். நஞ்சு கலந்த நீர் குடிக்கச் செய்வேன். | எரே 8:14 எரே 23:15 எரே 25:15 சங் 60:3 சங் 69:21 சங் 75:8 சங் 80:5 ஏசா 2:17 ஏசா 2:22 புலம் 3:15 புலம் 3:19 வெளிப் 8:11 |
| 16 | அவர்களோ அவர்தம் மூதாதையரோ அறிந்திராத மக்களினங்கள் நடுவில் அவர்களைச் சிதறடிப்பேன். நான் அவர்களை முற்றிலும் அழிக்கும் வரை அவர்களுக்குப் பின் வாளை அனுப்புவேன். போர் எழச் செய்வேன். | எரே 13:24 லேவி 26:33 உபா 4:27 உபா 28:25 உபா 28:36 உபா 28:64 உபா 32:26 நெகே 1:8 சங் 106:27 எசே 11:17 எசே 12:15 எசே 20:23 சகரி 7:14 யாக் 1:1 |
| 17 | படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ! கேளுங்கள். ஒப்பாரி வைக்கும் பெண்களை வரச்சொல்லுங்கள்: அவர்களுள் தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சொல்லியனுப்புங்கள். | 2நாளா 35:25 யோபு 3:8 பிரச 12:5 ஆமோ 5:16 ஆமோ 5:17 மத் 9:23 மாற் 5:38 |
| 18 | அவர்கள் விரைந்து வந்து நம்மைக் குறித்துப் புலம்பட்டும்: நம் கண்கள் நீர் பொழியட்டும்: நம் இமைகள் நீர் சொரியட்டும். | எரே 9:10 எரே 9:20 |
| 19 | ஏனெனில், சீயோனிலிருந்து புலம்பல் கேட்கின்றது: “நாம் இப்படிப் பாழடைந்து விட்டோமே: நம் மானமெல்லாம் போயிற்றே: நாட்டைவிட்டுச் செல்ல வேண்டியதாயிற்றே. நம் குடியிருப்புகள் தகர்க்கப்பட்டனவே.” | எரே 4:31 எசே 7:16-18 மீகா 1:8 மீகா 1:9 |
| 20 | பெண்டிரே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: உங்கள் செவிகள் அவர்தம் வாய்மொழியை ஏற்கட்டும்: உங்கள் புதல்வியருக்குப் புலம்பக் கற்றுக்கொடுங்கள். ஒவ்வொருத்தியும் அடுத்தவளுக்கு ஒப்பாரி வைக்கக் கற்றுக்கொடுக்கட்டும். | ஏசா 3:16-4 ஏசா 32:9-13 லூக் 23:27-30 |
| 21 | ஏனெனில், சாவு பலகணிகள் வழியாய் வந்துவிட்டது: நம் அரண்களுக்குள்ளும் நுழைந்து விட்டது: தெருக்களில் சிறுவர்களையும் பொதுவிடங்களில் இளைஞர்களையும் வீழ்த்திவிட்டது. | எரே 6:11 எரே 15:7 2நாளா 36:17 எசே 9:5 எசே 9:6 எசே 21:14 எசே 21:15 ஆமோ 6:10 ஆமோ 6:11 |
| 22 | ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார் எனச் சொல்: மனிதரின் பிணங்கள் சாணம்போல் வயல்வெளிகளில் விழுந்து கிடக்கும்: அறுவடை செய்வோனுக்குப் பின்னால் விடப்பட்ட அரிகளைப் போலக் கிடக்கும். | எரே 7:33 எரே 8:2 எரே 16:4 எரே 25:33 2இரா 9:37 சங் 83:10 ஏசா 5:25 செப் 1:17 |
| 23 | ஆண்டவர் கூறுவது இதுவே: ஞானி தம் ஞானத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். வலியவர் தம் வலிமையைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். செல்வர் தம் செல்வத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். | யோபு 5:12-14 சங் 49:10-13 சங் 49:16-18 பிரச 2:13-16 பிரச 2:19-16 பிரச 9:11 ஏசா 5:21 ஏசா 10:12 ஏசா 10:13 எசே 28:2-9 ரோம 1:22 1கொரி 1:19-21 1கொரி 1:27-29 1கொரி 3:18-20 யாக் 3:14-16 |
| 24 | பெருமை பாராட்ட விரும்புபவர், “நானே ஆண்டவர்” என்பதை அறிந்து புரிந்து கொள்வதிலும், பேரன்போடும் நீதியோடும் நேர்மையோடும் உலகில் நான் செயலாற்றுகிறேன் என்பதிலும் பெருமை பாராட்டுவாராக! ஏனெனில் இவற்றில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என்கிறார் ஆண்டவர். | எரே 4:2 சங் 44:8 ஏசா 41:16 ஏசா 45:25 ரோம 5:11 1கொரி 1:31 2கொரி 10:17 கலா 6:14 பிலிப் 3:3 |
| 25 | இதோ! நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்போது நான் உடலில் மட்டும் விருத்தசேதனம் செய்திருப்போர் அனைவரையும் தண்டிப்பேன். | எசே 28:10 எசே 32:19-32 ஆமோ 3:2 ரோம 2:8 ரோம 2:9 ரோம 2:25 ரோம 2:26 கலா 5:2-6 |
| 26 | எகிப்து, யூதா, ஏதோம், அம்மோன், மோவாபு ஆகிய நாடுகளையும் முன்தலையை மழித்துக் கொள்ளும் பாலை நிலத்தாரையும் தண்டிப்பேன்: ஏனெனில் வேற்றினத்தார் யாவரும் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்கள்: இஸ்ரயேல் வீட்டார் யாவரும் இதயத்தில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்கள். | எரே 25:9-26 எரே 27:3-7 எரே 46:1-52 ஏசா 13:1-24 எசே 24:1-32 ஆமோ 1:1-2 செப் 1:1-2 |