சங்கீதம் 120:2-6 - WCV
2
ஆண்டவரே! பொய் பேசும் வாயினின்று என்னை விடுவித்தருளும்: வஞ்சக நாவினின்று என்னைக் காத்தருளும்.
3
வஞ்சகம் பேசும் நாவே! உனக்கு என்ன கிடைக்கும்? அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்?
4
வீரனின் கூரிய அம்புகளும் தணல் வீசும் கரிகளும்தான் கிடைக்கும்!
5
ஐயோ! நான் மேசேக்கில் அன்னியனாய் வாழ்ந்தபோதும், கேதாரில் கூடாரங்களில் தங்க நேர்ந்தபோதும்,
6
சமாதானத்தைக் குலைப்பவர்களோடு, நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று.