2
மானிடா! தீர் நகரின் மன்னனுக்குச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இதயத்தின் செருக்கில், “நானே கடவுள்: நான் கடல் நடுவே கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறேன்” என்று சொல்கின்றாய், ஆனால் நீ கடவுளைப்போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல: மனிதனே!
3
தானியேலை விட நீ அறிவாளிதான்! மறைபொருள் எதுவும் உனக்கு மறைவாயில்லை!
4
உன் ஞானத்தாலும் அறிவாலும் உனக்குச் செல்வம் சேர்த்தாய்: உன் கருவூலத்தில் பொன்னையும் வெள்ளியையும் குவித்தாய்.
5
உன் வாணிபத் திறமையால் உன் செல்வத்தைப் பெருக்கினாய்: உன் செல்வத்தினாலோ உன் இதயம் செருக்குற்றது.
6
ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: கடவுளைப்போல் அறிவாளி என உன்னைக் கருதிக் கொள்வதால்,
7
மக்களினங்களில் மிகவும் கொடியோரான அன்னியரை உனக்கெதிராய் எழும்பச் செய்வேன்: அவர்கள் உன் அழகுக்கும் ஞானத்திற்கும் எதிராக உருவிய வாளுடன் வருவர்: உன் பெருமையைக் குலைப்பர்.
8
படு குழியில் தள்ளுவர் உன்னை: கடல் நடுவே மூழ்கிச் சாவோரெனச் சாவாய் நீயே!
9
அப்போது உன்னைக் கொல்வோரின் நடுவில் “நானே கடவுள்” என்று சொல்வாயே? உன்னைக் குத்திக் கிழிப்போரின் கையில் நீ கடவுளாக அல்ல, மனிதனாகவே இருப்பாய்.