| 1 | இஸ்ரயேல் வீட்டாரே! ஆண்டவர் உங்களுக்குக் கூறும் சொல்லைக் கேளுங்கள். | எரே 2:4 எரே 13:15-17 எரே 22:2 எரே 42:15 1இரா 22:19 சங் 50:7 ஏசா 1:10 ஏசா 28:14 ஓசி 4:1 ஆமோ 7:16 1தெச 2:13 வெளிப் 2:29 |
| 2 | ஆண்டவர் கூறுவது இதுவே: வேற்றினங்களின் வழியைக் கற்றுக் கொள்ளாதீர்: வானத்தில் தோன்றும் அடையாளங்களைக் கண்டு கலங்காதீர்: வேற்றினத்தாரே அவற்றால் கலக்கமுறுவர். | லேவி 18:3 லேவி 20:23 உபா 12:30 உபா 12:31 எசே 20:32 |
| 3 | வேற்றினங்கள் வழிபடும் சிலைகள் வீணானவை: அவை காட்டிலிருந்து வெட்டப்பட்ட மரத்தாலானவை: கைவினைஞர் உளியால் செய்த வேலைப்பாடுகள். | எரே 10:8 எரே 2:5 லேவி 18:30 1இரா 18:26-28 மத் 6:7 ரோம 1:21 1பேது 1:18 |
| 4 | அவை பொன், வெள்ளியால் அணி செய்யப்பட்டவை. அசையாதபடி ஆணி, சுத்தியல் கொண்டு பொருத்தப் பெற்றவை. | சங் 115:4 சங் 135:15 ஏசா 40:19 ஏசா 40:20 |
| 5 | அவை வெள்ளரித் தோட்டத்துப் பொம்மை போன்றவை: அவற்றால் பேச முடியாது: அவற்றைத் தூக்கிக்கொண்டுதான் செல்லவேண்டும். அவற்றால் நடக்கவும் முடியாது. அவை நன்மையும் செய்யா: தீமையும் செய்யா: அவற்றைக் கண்டு அஞ்ச வேண்டாம். | சங் 115:5-8 சங் 135:16-18 ஆபகூ 2:19 1கொரி 12:2 வெளிப் 13:14 வெளிப் 13:15 |
| 6 | ஆண்டவரே! உமக்கு நிகர் யாருமிலர்: நீர் பெரியவர்: உமது பெயர் ஆற்றல் மிக்கது. | யாத் 8:10 யாத் 9:14 யாத் 15:11 உபா 32:31 உபா 33:26 2சாமு 7:22 சங் 35:10 சங் 86:8-10 சங் 89:6-8 ஏசா 40:18 ஏசா 40:25 ஏசா 46:5 ஏசா 46:9 |
| 7 | மக்களினங்களின் மன்னரே! உமக்கு அஞ்சாதவர் யார்? அரசுரிமை உமதே: வேற்றினத்தாரின் ஞானிகள் அனைவரிலும் அவர்களின் அரசுகள் அனைத்திலும் உமக்கு நிகர் யாருமிலர். | எரே 5:22 யோபு 37:23 யோபு 37:24 லூக் 12:5 வெளிப் 15:4 |
| 8 | அவர்கள் மூடர்களும் முட்டாள்களுமாய் உள்ளனர்: அவர்களது போதனையின் பொருளாம் சிலைகள் மரக்கட்டைகளே. | எரே 10:14 எரே 51:17 எரே 51:18 சங் 115:8 சங் 135:18 ஏசா 41:29 ஆபகூ 2:18 சகரி 10:2 ரோம 1:21 ரோம 1:22 |
| 9 | தர்சீசிலிருந்து வெள்ளித் தகடுகளும், ஊபாசிலிருந்து பொன்னும் வந்து சேர்கின்றன. அவை கைவினைஞரின் வேலைப்பாடுகள்: பொற்கொல்லனின் கைத்திறனால் ஆனவை: ஊதா, கருஞ்சிவப்பு உடைகளைக் கொண்டவை. அவை எல்லாமே தேர்ச்சிபெற்ற கைவினைஞரின் வேலைப்பாடுகள். | 1இரா 10:22 எசே 27:12 |
| 10 | ஆனால், ஆண்டவரே உண்மையான கடவுள்! அவரே வாழும் கடவுள்! என்றும் ஆளும் அரசர்! அவர் வெஞ்சினம் கண்டு நிலம் நடுங்கும்: அவர் கடுங்கோபத்தை வேற்றினத்தார் தாங்கிக்கொள்ளார். | 1இரா 18:39 2நாளா 15:3 யோவா 17:3 1தெச 1:9 1யோவா 5:20 |
| 11 | நீ அவர்களுக்கு இவ்வாறு கூறு: விண்ணையும் மண்ணையும் உருவாக்காத அந்தத் தெய்வங்கள் மண்ணின் மீதும் விண்ணின் கீழும் இல்லாதொழியும். | சங் 96:5 |
| 12 | அவரே தம் ஆற்றலால் மண்ணுலகைப் படைத்தார்: தம் ஞானத்தால் பூவுலகை நிலை நாட்டினார்: தம் கூர்மதியால் விண்ணுலகை விரித்தார். | எரே 32:17 எரே 51:15-19 ஆதி 1:1 ஆதி 1:6-9 யோபு 38:4-7 சங் 33:6 சங் 136:5 சங் 136:6 சங் 146:5 சங் 146:6 சங் 148:4 சங் 148:5 யோவா 1:3 கொலோ 1:16 |
| 13 | அவர் குரல் கொடுக்க வானத்து நீர்த்திரள் முழக்கமிடுகிறது: மண்ணுலகின் எல்லையினின்று மேகங்கள் எழச்செய்கிறார்: மழை பொழியுமாறு மின்னல் வெட்டச் செய்கிறார்: தம் கிடங்குகளினின்று காற்று வீசச் செய்கிறார். | யோபு 37:2-5 யோபு 38:34 யோபு 38:35 சங் 18:13 சங் 29:3-10 சங் 68:33 |
| 14 | மனிதர் யாவரும் மூடர்கள், அறிவிலிகள்: கொல்லர் எல்லாரும் தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்: அவர்களின் வார்ப்புப் படிமங்கள் பொய்யானவை: அவற்றுக்கு உயிர் மூச்சே இல்லை. | எரே 10:8 எரே 51:17 எரே 51:18 சங் 14:2 சங் 92:6 சங் 94:8 நீதி 30:2 ஏசா 44:18-20 ஏசா 46:7 ஏசா 46:8 ரோம 1:22 ரோம 1:23 |
| 15 | அவை பயனற்றவை: ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்: தம் தண்டனையின் காலத்தில் அவை அழிந்துவிடும். | எரே 10:8 எரே 8:19 எரே 14:22 எரே 51:18 உபா 32:21 1சாமு 12:21 ஏசா 41:24 ஏசா 41:29 யோனா 2:8 அப் 14:15 |
| 16 | யாக்கோபின் பங்காய் இருப்பவரோ இவற்றைப் போன்றவர் அல்லர்: அவரே அனைத்தையும் உருவாக்கியவர்: அவரது உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேல் இனத்தை உருவாக்கியவரும் அவரே: படைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயராகும். | எரே 51:19 சங் 16:5 சங் 16:6 சங் 73:26 சங் 119:57 சங் 142:5 புலம் 3:24 |
| 17 | முற்றுகையிடப்பட்டவனே, தலையில் கிடக்கும் உன் பொருள்களை மூட்டையாகக் கட்டு. | எரே 6:1 எசே 12:3-12 மீகா 2:10 மத் 24:15 |
| 18 | ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: நாட்டில் வாழ்வோரை இத்தருணத்தில் வீசி எறிவேன்: அவர்கள் என்னைக் கண்டுணருமாறு அவர்களுக்குத் துன்பம் வருவிப்பேன். | எரே 15:1 எரே 15:2 எரே 16:13 உபா 28:63 உபா 28:64 1சாமு 25:29 |
| 19 | ஐயோ நான் நொறுங்குண்டேன்: என் காயம் கொடியது: நானோ “உண்மையில் இது ஒரு நோய்: நான் இதைத் தாங்கியே ஆக வேண்டும்” என்று எண்ணிக்கொண்டேன். | எரே 4:19 எரே 4:31 எரே 8:21 எரே 9:1 எரே 17:13 புலம் 1:2 புலம் 1:12-22 புலம் 2:11-22 புலம் 3:48 |
| 20 | என் கூடாரம் அழிக்கப்பட்டது: அதன் கயிறுகளெல்லாம் அறுத்தெறியப்பட்டன: என் மக்கள் என்னைவிட்டுச் சென்றுவிட்டனர்: அவர்கள் இங்கு இல்லை: என் கூடாரத்தை மீண்டும் எழுப்புவார் எவருமிலர்: அதன் திரைகளைக் கட்டுவார் யாருமிலர். | எரே 4:20 ஏசா 54:2 புலம் 2:4-6 |
| 21 | ஏனெனில், மேய்ப்பவர்கள் மூடர்களாய் இருந்தனர்: அவர்கள் ஆண்டவரைத் தேடவில்லை: எனவே, அவர்கள் வாழ்வு வளம் பெறவில்லை: அவர்களின் மந்தைகள் எல்லாம் சிதறிப்போயின. | எரே 10:8 எரே 10:14 எரே 2:8 எரே 5:31 எரே 8:9 எரே 12:10 எரே 23:9-32 ஏசா 56:10-12 எசே 22:25-30 எசே 34:2-10 யோவா 10:12 யோவா 10:13 சகரி 10:3 |
| 22 | குரல் ஒலி ஒன்று கேட்கின்றது: அது அண்மையில் ஒலிக்கின்றது: வடக்கு நாட்டிலிருந்து பெருங் கொந்தளிப்பு எழுகின்றது: யூதாவின் நகர்கள் பாழாகிக் குள்ள நரிகளின் வளையாகப் போகின்றன. | எரே 1:15 எரே 4:6 எரே 5:15 எரே 6:1 எரே 6:22 ஆபகூ 1:6-9 |
| 23 | ஆண்டவரே! நான் அறிவேன்: மனிதர் செல்ல வேண்டிய வழி அவர்களின் கையில் இல்லை: நடப்பவன் காலடிப் போக்கும் அவர்களின் அதிகாரத்தில் இல்லை. | சங் 17:5 சங் 37:23 சங் 119:116 சங் 119:117 நீதி 16:1 நீதி 20:24 |
| 24 | ஆண்டவரே! உம் சினத்திற்கு ஏற்ப அன்று, உன் நீதிக்கு ஏற்ப என்னைத் திருத்தியருளும். இல்லையெனில், நான் ஒன்றுமில்லாமை ஆகிவிடுவேன். | எரே 30:11 சங் 6:1 சங் 38:1 ஆபகூ 3:2 |
| 25 | உம்மை அறியாத வேற்றினத்தார் மேலும், உம் பெயரைச் சொல்லி மன்றாடாத குடும்பத்தார் மேலும் உன் சீற்றத்தைக் காட்டியருளும். ஏனெனில், அவர்கள் யாக்கோபை விழுங்கிவிட்டார்கள்: விழுங்கி முற்றிலும் அழித்து விட்டார்கள்: அவர் குடியிருப்பையும் பாழாக்கிவிட்டார்கள். | சங் 79:6 சங் 79:7 |