16
அவர்களுள் சிலர் பிழைத்து, தப்பி ஓடினாலும் அவர்கள் ஒவ்வொருவரும் மலைகளில் தம் குற்றங்களுக்காகப் பள்ளத்தாக்குப் புறாக்களைப் போல்ப் புலம்புவர்.
17
கைகள் எல்லாம் வலுவிழந்து போகும்: முழங்கால்கள் எல்லாம் தண்ணீரைப்போல் ஆகிவிடும்.
18
அவர்கள் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொள்வர்: திகில் அவர்களை மூடிக்கொள்ளும்: முகங்கள் எல்லாம் வெட்சி நாணும்: அவர்களின் தலைகள் எல்லாம் மொட்டையடிக்கப்படும்.