| 1 | யூதாவின் பாவம் இரும்பு எழுத்தாணியாலும் வைர நுனியாலும் எழுதப்பட்டுள்ளது. அது அவர்கள் இதயப் பலகையிலும் பலிபீடக் கொம்புகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது. | யோபு 19:23 யோபு 19:24 |
| 2 | தழைத்த மரங்களின் கீழும், உயர்ந்த குன்றுகளின் மேலும், திறந்த வெளி மலைகள் மீதும் உள்ள அவர்கள் பலிபீடங்களையும் அசேராக் கம்பங்களையும் அவர்களின் பிள்ளைகளே நினைவுகூருகின்றார்கள். | எரே 7:18 ஓசி 4:13 ஓசி 4:14 |
| 3 | ஆகவே, நாடெங்கும் செய்யப்படும் பாவங்களுக்கு ஈடாக உன் செல்வங்களையும் கருவூலங்களையும் தொழுகைமேடுகளையும் கொள்ளைப்பொருள் ஆக்குவேன். | எரே 26:18 ஏசா 2:2 ஏசா 2:3 புலம் 5:17 புலம் 5:18 மீகா 3:12 மீகா 4:1 மீகா 4:2 |
| 4 | நான் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ள நாட்டின்மேல் உனக்குள்ள பிடி தளரும். முன்பின் தெரியாத ஒரு நாட்டில், உன் எதிரிகளுக்கு நீ அடிபணியச் செய்வேன். ஏனெனில், நீ என்னில் மூட்டியுள்ள கோபக்கனல் என்றென்றும் கொழுந்துவிட்டு எரியும். | எரே 16:13 எரே 25:9-11 லேவி 26:31-34 உபா 4:26 உபா 4:27 உபா 28:25 யோசு 23:15 யோசு 23:16 1இரா 9:7 2இரா 25:21 |
| 5 | ஆண்டவர் கூறுவது இதுவே: மனிதரில் நம்பிக்கை வைப்போரும் வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக் காண்போரும் சபிக்கப்படுவர். | சங் 62:9 சங் 118:8 சங் 118:9 சங் 146:3 சங் 146:4 ஏசா 2:22 ஏசா 30:1-7 ஏசா 31:1-9 ஏசா 36:6 எசே 29:6 எசே 29:7 |
| 6 | அவர்கள் பாலைநிலத்துப் புதர்ச்செடிக்கு ஒப்பாவர். பருவ காலத்திலும் அவர்கள் பயனடையார்: பாலை நிலத்தின் வறண்ட பகுதிகளிலும் யாரும் வாழா உவர் நிலத்திலுமே அவர்கள் குடியிருப்பர். | எரே 48:6 யோபு 8:11-13 யோபு 15:30-34 சங் 1:4 சங் 92:7 சங் 129:6-8 ஏசா 1:30 |
| 7 | ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்: ஆண்டவரே அவர்களது நம்பிக்கை. | சங் 2:12 சங் 34:8 சங் 84:12 சங் 125:1 சங் 146:5 நீதி 16:20 ஏசா 26:3 ஏசா 26:4 ஏசா 30:18 எபே 1:12 |
| 8 | அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவர்: அது நீரோடையை நோக்கி வேர் விடுகின்றது. வெப்பமிகு நேரத்தில் அதற்கு அச்சமில்லை: அதன் இலைகள் பசுமையாய் இருக்கும்: வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது: அது எப்போதும் கனி கொடுக்கும். | யோபு 8:16 சங் 1:3 சங் 92:10-15 ஏசா 58:11 எசே 31:4-10 எசே 47:12 |
| 9 | இதயமே அனைத்திலும் வஞ்சகம் மிக்கது: அதனை நலமாக்க முடியாது. அதனை யார்தான் புரிந்துகொள்வர்? | எரே 16:12 ஆதி 6:5 ஆதி 8:21 யோபு 15:14-16 சங் 51:5 சங் 53:1-3 நீதி 28:26 பிரச 9:3 மத் 15:19 மாற் 7:21 மாற் 7:22 எபிரெ 3:12 யாக் 1:14 யாக் 1:15 |
| 10 | ஆண்டவராகிய நானே இதயச் சிந்தனைகளை ஆய்பவர்: உள்ளுணர்வுகளைச் சோதித்து அறிபவர். ஒவ்வொருவரின் வழிகளுக்கும் செயல்களின் விளைவுக்கும் ஏற்றவாறு நடத்துபவர். | எரே 11:20 எரே 20:12 1சாமு 16:7 1நாளா 28:9 1நாளா 29:17 2நாளா 6:30 சங் 7:9 சங் 139:1 சங் 139:2 சங் 139:23 சங் 139:24 நீதி 17:3 யோவா 2:25 ரோம 8:27 எபிரெ 4:12 எபிரெ 4:13 வெளிப் 2:23 |
| 11 | நேர்மையற்ற வழிகளில் செல்வம் சேர்ப்போர் தாம் இடாத முட்டைகளை அடைகாக்கும் கௌதாரி போன்றோர்: தம் வாழ்நாள்களின் நடுவிலேயே அவர்கள் அச்செல்வத்தை இழந்துவிடுவர்: இறுதியில் அவமதிப்புக்கு உள்ளாவர். | எரே 5:27 எரே 5:28 எரே 22:13 எரே 22:17 நீதி 1:18 நீதி 1:19 நீதி 13:11 நீதி 15:27 நீதி 21:6 நீதி 28:8 நீதி 28:16 நீதி 28:20 நீதி 28:22 ஏசா 1:23 ஏசா 1:24 எசே 22:12 எசே 22:13 ஓசி 12:7 ஓசி 12:8 ஆமோ 3:10 ஆமோ 8:4-6 மீகா 2:1 மீகா 2:2 மீகா 2:9 மீகா 6:10-12 மீகா 7:3 ஆபகூ 2:6-12 செப் 1:9 சகரி 5:4 சகரி 7:9-13 மல்கி 3:5 மத் 23:14 1தீமோ 6:9 தீத் 1:11 யாக் 5:3-5 2பேது 2:3 2பேது 2:14 |
| 12 | “நம் திருத்தூயகம் தொடக்கத்திலிருந்தே உயர்ந்த இடத்தில் அமைந்த, மாட்சிமிகு அரியணையாய் உள்ளது.” | எரே 3:17 எரே 14:21 2நாளா 2:5 2நாளா 2:6 சங் 96:6 சங் 103:19 ஏசா 6:1 ஏசா 66:1 எசே 1:26 எசே 43:7 மத் 25:31 எபிரெ 4:16 எபிரெ 12:2 வெளிப் 3:21 |
| 13 | ஆண்டவரே! இஸ்ரயேலின் நம்பிக்கையே! உம்மைப் புறக்கணித்தோர் யாவரும் வெட்கமுறுவர்: உம்மைவிட்டு அகன்றோர் தரையில் எழுதப்பட்டோர் ஆவர்: ஏனெனில், அவர்கள் வாழ்வளிக்கும் நீரூற்றாகிய ஆண்டவரைப் புறக்கணித்தார்கள். | எரே 17:17 எரே 14:8 சங் 22:4 யோவே 3:16 அப் 28:20 1தீமோ 1:1 |
| 14 | ஆண்டவரே, என்னை நலமாக்கும்: நானும் நலமடைவேன். என்னை விடுவியும்: நானும் விடுதலை அடைவேன்: ஏனெனில் நீரே என் புகழ்ச்சிக்குரியவர். | எரே 31:18 உபா 32:39 சங் 6:2 சங் 6:4 சங் 12:4 ஏசா 6:10 ஏசா 57:18 ஏசா 57:19 லூக் 4:18 |
| 15 | இதோ அவர்கள் என்னிடம் “ஆண்டவரின் வாக்கு எங்கே? அது நிறைவேறட்டுமே” என்கிறார்கள். | எரே 20:7 எரே 20:8 ஏசா 5:19 எசே 12:22 எசே 12:27 எசே 12:28 ஆமோ 5:18 2பேது 3:3 2பேது 3:4 |
| 16 | அவர்கள்மேல் தீமையை அனுப்ப வேண்டும் என்று நான் உம்மை நெருக்கவில்லை: கொடுமையின் நாளை நான் விரும்பவில்லை: நான் கூறியவைதாம் உமக்குத் தெரியமே: அவை உம்முன்தாமே கூறப்பட்டன. | எரே 1:4-10 எரே 20:9 எசே 3:14-19 எசே 33:7-9 ஆமோ 7:14 ஆமோ 7:15 யாக் 1:19 யாக் 3:1 |
| 17 | நீ எனக்குத் திகிலாய் இராதீர்: தீமையின் நாளில் நீரே என் புகலிடம். | யோபு 31:23 சங் 77:2-9 சங் 88:15 சங் 88:16 |
| 18 | என்னைத் துன்புறுத்துவோர் வெட்கம் அடையட்டும்: நானோ வெட்கம் அடையாதிருப்பேனாக! அவர்கள் திகிலுறட்டும்: நானோ திகிலுறாதிருப்பேனாக. தீமையின் நாளை அவர்கள்மேல் வரச்செய்யும்: இரட்டிப்பான அழிவு அவர்கள்மேல் வரட்டும்: அவர்கள் அடியோடு ஒழியட்டும். | எரே 20:11 சங் 35:4 சங் 35:26 சங் 35:27 சங் 40:14 சங் 70:2 சங் 83:17 சங் 83:18 |
| 19 | ஆண்டவர் கூறியது இதுவே: நீ போய் யூதாவின் அரசர்களின் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் பயன்படும் பொதுமக்கள் வாயிலிலும் எருசலேமின் வாயில்கள் அனைத்திலும் நின்றுகொள். | எரே 7:2 எரே 19:2 எரே 26:2 எரே 36:6 எரே 36:10 நீதி 1:20-22 நீதி 8:1 நீதி 9:3 அப் 5:20 |
| 20 | நீ அவர்களுக்கு அறிவிக்க வேண்டியது: இவ்வாயில்கள் வழியாகச் செல்லும் யூதாவின் அரசர்களே, யூதாவின் அனைத்து மக்களே, எருசலேமில் வாழ்வோரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். | எரே 13:18 எரே 19:3 எரே 22:2 சங் 49:1 சங் 49:2 எசே 2:7 எசே 3:17 ஓசி 5:1 ஆமோ 4:1 மீகா 3:1 வெளிப் 2:29 |
| 21 | ஆண்டவர் கூறுவது இதுவே: உங்கள் உயிரை முன்னிட்டு ஓய்வுநாளில் சுமை தூக்க வேண்டாம்: அவற்றை எருசலேமின் வாயில்கள் வழியாகக் கொண்டு செல்லவும் வேண்டாம். | உபா 4:9 உபா 4:15 உபா 4:23 உபா 11:16 யோசு 23:11 நீதி 4:23 மாற் 4:24 லூக் 8:18 அப் 20:28 எபிரெ 2:1-3 எபிரெ 12:15 எபிரெ 12:16 |
| 22 | ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்தும் சுமைகள் தூக்கிச் செல்லவேண்டாம். அன்று எந்த வேலையும் செய்யவேண்டாம். உங்கள் மூதாதையருக்கு நான் கொடுத்த கட்டளைப்படி ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடியுங்கள். | ஆதி 2:2 ஆதி 2:3 யாத் 16:23-29 யாத் 20:8-10 யாத் 23:12 யாத் 31:13-17 லேவி 19:3 லேவி 23:3 உபா 5:12-15 ஏசா 56:2-6 ஏசா 58:13 எசே 20:12 எசே 20:20 எசே 20:21 எசே 22:8 லூக் 6:5 லூக் 23:56 வெளிப் 1:10 |
| 23 | அவர்களோ எனக்குச் செவி சாய்க்கவில்லை: நான் சொன்னதைக் கவனிக்கவில்லை: கேட்டுக் கற்றுக்கொள்ளாதபடி முரட்டுப் பிடிவாதம் செய்தனர். | எரே 7:24-26 எரே 11:10 எரே 16:11 எரே 16:12 எரே 19:15 ஏசா 48:4 எசே 20:13 எசே 20:16 எசே 20:21 சகரி 7:11 சகரி 7:12 அப் 7:51 |
| 24 | ஆண்டவர் கூறுவது: நீங்கள் எனக்குச் செவிகொடுத்து ஓய்வு நாளில் இந்நகரின் வாயில்கள் வழியாகச் சுமை தூக்கிச் செல்லாது, வேலை எதுவும் செய்யாது, ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடிபபீர்களாகில், | யாத் 15:26 உபா 11:13 உபா 11:22 ஏசா 21:7 ஏசா 55:2 சகரி 6:15 2பேது 1:5-10 |
| 25 | தாவீதின் அரியணையில் அமரும் அரசர்களும் இளவரசர்களும் இந்நகரின் வாயில் வழியாகச் செல்வார்கள்: குதிரைகளிலும் தேர்களிலும் ஏறிச் செல்வார்கள். அவர்களோடு தலைவர்களும் யூதா நாட்டினரும் எருசலேம்வாழ் மக்களும் செல்வார்கள். இந்நகரில் என்றுமே மக்கள் குடியிருப்பார்கள். | எரே 22:4 |
| 26 | அப்போது யூதாவின் நகர்களிலிருந்தும் எருசலேமின் சுற்றுப்புறங்களிலிருந்தும் பென்யமின் நாட்டிலிருந்தும் செபேலா சமவெளியிலிருந்தும் மலை நாட்டிலிருந்தும் நெகேபிலிருந்தும் வருபவர்கள் எரி பலிகளையும் மற்றப் பலிகளையும் உணவுப் படையலையும் தூபத்தையும் நன்றிப் பலிகளையும் ஆண்டவர் இல்லத்துக்குக் கொண்டுவருவார்கள். | எரே 32:44 எரே 33:13 யோசு 15:21-63 |
| 27 | ஆனால், நீங்கள் ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடிக்கவேண்டும்: அன்று எருசலேமின் வாயில்கள் வழியாகச் சுமை தூக்கிச் செல்லக் கூடாது: எனினும் என்னுடைய சொல்லுக்கு நீங்கள் செவி கொடுக்காமல் இருந்தால், நான் எருசலேமின் வாயில்களில் தீப்பற்றியெரியச் செய்வேன்: அது நகரின் அரண்மனைகளை அழித்துவிடும்: அத்தீயோ அணையாது. | எரே 17:24 எரே 6:17 எரே 26:4-6 எரே 44:16 ஏசா 1:20 சகரி 7:11-14 எபிரெ 12:25 |